தோல் நிறமி இழத்தல்

தோல் நிறமி இழத்தல் (Vitiligo) என்னும் இந்த சரும பாதிப்பு, தோலின் நிறமிகள் இழக்கப்பட்டு வெள்ளையாக மாறுவதால் ஏற்படும் பாதிப்பாகும். இது தோலின் நிறமி செல்கள் இறப்பதால் அல்லது தொடர்ந்து வேலை செய்ய முடியாததால் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உடலில் ஏற்படுவதற்கான தெளிவான ஒரு காரணம் மட்டும் இல்லை என்றாலும், மரபணு, விஷத்தன்மை உடைய அழுத்தம், நரம்பு மண்டலப் பாதிப்பு அல்லது வைரஸ் காரணங்கள் போன்றவை இவற்றின் மூலமாக செயல்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.[1][2] பொதுவாக தோல் நிறமி இழப்பதை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல், மற்றொன்று கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல்.

உலகளவில், தோல் நிறமி இழக்கும் இந்தப் பாதிப்பு ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவே உள்ளது.[3] ஒரு சில குறிப்பிட்ட பகுதி மக்கள் தொகையில் மட்டும் சராசரியாக இரண்டு முதல் மூன்று சதவீத மக்கள் தொகையில் பாதிப்பு ஏற்படுகிறது, அத்துடன் சில இடங்களில் உள்ள மக்களுக்கு 16 சதவீத மக்கள் தொகையில் கூட பாதிப்புகள் ஏற்படுகின்றன.[4] அடிசனின் நோய், ஹாஷிமோட்டோ தைராய்டியம் மற்றும் வகை 1 நீரிழிவு போன்ற நோய்கள் பெரும்பாலும் தோல் நிறமி இழத்தல் பாதிப்படைந்தவர்களைத் தாக்குகிறது. இதனைக் குணப்படுத்தும் தெளிவான முறை இல்லாவிட்டாலும், சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் மேற்பூச்சு ஸ்டீராய்டு மருந்துகள், கால்சினெரின் தடுப்பான்கள் மற்றும் ஒளிக்கதிர் சிகிச்சைகள் போன்றவை முக்கியமானவை.

தோல் நிறமி இழத்தல் பிணி

வகைப்படுத்துதல்

தொகு

இந்த பாதிப்பினை, சமீபத்திய ஒருமித்த கருத்துக்களை மையமாகக் கொண்டு கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல் மற்றும் கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல் என இரு வகைகளாகப் பிரிக்கலாம். இதில் கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தலால் பொதுவாக பலர் பாதிக்கப்படுகின்றனர்.[5][6]

கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல்

தொகு

கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல் வகை தோல் நிறமி இழத்தலில் சமச்சீர் முறையில் நிறமி இழக்கப்பட்ட சருமத்தில் பிணைப்புகள் தோன்றும். புதிய பிணைப்புகள் பெரிய பகுதிகளில் தோற்றமளிக்கும் அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் தோற்றமளிக்கும். கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல் பாதிப்பு எந்த வயதினருக்கும் வரும் சாத்தியக்கூறுகள் உண்டு (ஆனால் கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல் 13 முதல் 19 வயதுடைய இளம்பருவத்தினருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்)[7]

கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தலின் உட்பிரிவுகள் பின்வருமாறு:

தொகு

பொதுவான தோல் நிறமி இழத்தல்:

தொகு

இது பொதுவாக ஏற்படும் தோல் நிறமி இழத்தல் ஆகும். நிறமிகள் இழக்கப்படும் அனைத்து உடல் பாகங்களிலும் இது ஏற்படும் வாய்ப்புள்ளது.

உலகளாவிய தோல் நிறமி இழத்தல்:

தொகு

உடலின் பெரும்பகுதியினை தோல் நிறமி இழக்கும் நிகழ்வு சூழ்ந்துகொள்ளும்.

குவியும்படியான தோல் நிறமி இழத்தல்:

தொகு

பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த பாதிப்பு பிரிவில், சருமத் தோலின் நிறப்புள்ளிகள் சிலவிடங்களில் மட்டும் குழிந்து காணப்படும்.

ஆக்ரோஃபேசியல் தோல் நிறமி இழத்தல்:

தொகு

விரல்களில் அதிகமாக ஏற்படும் பாதிப்புகள்.

மியூகஸ் தோல் நிறமி இழத்தல்: கோழை போன்ற சவ்வுகளில் ஏற்படும் நிறமிகளின் இழப்பினால் ஏற்படும் பாதிப்புகள்.[8]

கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல்

தொகு

கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல் வகை சருமப் பாதிப்பு இதர தொடர்புடைய நோய்களுக்கான காரணங்கள் மற்றும் நோய்த்தாக்கம் ஆகியவற்றில் இருந்து வேறுபட்டவை. இதன் சிகிச்சை முறைகள் கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல் பாதிப்பில் இருந்து வேறுபட்டவை. முதுகெலும்பு தண்டுவடத்தின், முகுகுப்புற வேர்களுடன் தொடர்புடைய பகுதிகளில் இவ்வகைப் பாதிப்பு ஏற்படும்.[6][9] கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல் பாதிப்புகளை விட இவை விரைவாக பரவும் தன்மை கொண்டது.[9] பொதுவான கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல் பாதிப்பினைக் காட்டிலும் இதன் பாதிப்புகள் நிலையாகவும் அதிகமாகவும் இருக்கும்.[7]

பாதிக்கப்படுபவர்கள்

தொகு

உலக மக்களில் 0.5% முதல் 2% வரை மக்கள் இந்த தோல் நிறமி இழத்தல் பாதிப்புக்குள்ளாகின்றனர். அனைத்து இன மக்களும் இதில் சரிசமமாக பாதிப்படைகின்றனர். ஆண் மற்றும் பெண் என இருபாலரும் சம எண்ணிக்கையிலேயே பாதிக்குள்ளாகின்றனர். இருப்பினும் அதிகப்படியான பெண் நோயாளிகள் பற்றி வெளியில் தெரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 50 சதவீதம் நோயாளிகளுக்கு அவர்களின் சருமம் வெள்ளை நிறமாக மாற்றமடைதல் 20 வயதிற்குள்ளாகவே நடந்துள்ளது. வயது முதிர்ந்தவர்களுக்கு இதுபோன்று நடப்பது பொதுவான நிகழ்வன்று. வயது முதிர்ந்தவர்களுக்கும், குழந்த பருவத்தினருக்கும் தோல் நிறமி இழப்பு ஏற்படும் நிகழ்வு மிகவும் குறைவு.

காரணங்கள்

தொகு

வித்தியாசமான மாற்றங்களுக்குட்பட்டு இது மக்களைப் பாதிப்பதால் தோல் நிறமி இழப்புகள் எப்போது ஏற்படும், எப்படி ஏற்படும் மற்றும் எவ்வளவு தூரம் ஏற்படும் என்பது பற்றி துல்லியமாக கணிப்பது கடினம். இது குழப்பமான நோய்தோன்றும் வகையினைச் சார்ந்தது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். சில மரபணு சம்பந்தப்பட்ட காரணங்களால் கூட மெலனோசைட் இழப்புகள் ஏற்படலாம். ஆனால் 30% நோயாளிகள் தங்கள் குடும்பத்தில் ஏற்கனவே பாதிக்கப்பட்டவரை கொண்டுள்ளனர்.

தூண்டுதல்கள்

தொகு

தோல் நிறமிகள் இழத்தலைப் பின்வரும் காரணிகள் அதிகரிக்கின்றன.

  • குடும்ப தோல் நிறமி இழத்தலுக்கான வரலாறு
  • பீனால் கலந்த பொருட்களை அதிகம் பயன்படுத்துவது
  • கூடுதல் தைராய்டு சுரப்பி செயலாக்கத்தினால் நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் அதிகரித்து மெலனோசைட்களை அழித்துவிடுதல்.
  • அழுத்தமான நிகழ்ச்சிகள்
  • நரம்பு மண்டல காரணங்கள்
  • வைரஸ் காரணங்கள்

குறிப்புகள்

தொகு
  1. Rietschel, Robert L.; Fowler, Joseph F., Jr. (2001). Fisher's Contact Dermatitis (5th ed.). Philadelphia: Lippincott Williams & Wilkins. pp. 571–577. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7817-2252-7.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  2. Halder, RM; Chappell, JL (2009). "Vitiligo update". Seminars in cutaneous medicine and surgery 28 (2): 86–92. doi:10.1016/j.sder.2009.04.008. பப்மெட்:19608058. 
  3. Nath SK, Majumder PP, Nordlund JJ (1994). "Genetic epidemiology of vitiligo: multilocus recessivity cross-validated". American Journal of Human Genetics 55 (5): 981–90. பப்மெட்:7977362. 
  4. Krüger C, Schallreuter KU (October 2012). "A review of the worldwide prevalence of vitiligo in children/adolescents and adults". Int J Dermatol 51 (10): 1206–12. doi:10.1111/j.1365-4632.2011.05377.x. பப்மெட்:22458952. 
  5. Vitiligo by Mauro Picardo and Alain Taïeb (Dec 17, 2009), Introduction section.
  6. 6.0 6.1 Ezzedine K, Eleftheriadou V, Whitton M, van Geel N (January 2015). "Vitiligo". Lancet S0140-6736 (14): 60763–7. doi:10.1016/S0140-6736(14)60763-7. பப்மெட்:25596811. 
  7. 7.0 7.1 Huggins RH, Schwartz RA, Janniger CK (2005). "Vitiligo". Acta Dermatovenerologica Alpina, Panonica, et Adriatica 14 (4): 137–42, 144–5. பப்மெட்:16435042. http://www.mf.uni-lj.si/acta-apa/acta-apa-05-4/2.pdf. 
  8. "Vitiligo". drbatul.com. பார்க்கப்பட்ட நாள் 15 December 2015.
  9. 9.0 9.1 van Geel N, Mollet I, Brochez L, Dutré M, De Schepper S, Verhaeghe E, Lambert J, Speeckaert R (February 2012). "New insights in segmental vitiligo: case report and review of theories". British Journal of Dermatology 166 (2): 240–6. doi:10.1111/j.1365-2133.2011.10650.x. பப்மெட்:21936857. 

புற இணைப்புகள்

தொகு
வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோல்_நிறமி_இழத்தல்&oldid=3702398" இலிருந்து மீள்விக்கப்பட்டது