தோல் பாவை நிழற்கூத்து

தோல் பாவை நிழற்கூத்து என்பது தமிழகத்தின் தொன்மையான கதை சொல்லும் கலையாகும். இதில் பதபடுத்தப்பட்ட ஆட்டுத்தோலில் வரைந்து வெட்டபட்ட உருவங்களைக் ஒளியுட்டப்பட்ட திரைக்கு பின்னால் வைத்துக்கொண்டு கதை சொல்லப்படுகிறது. உலகில் தற்போது சுமார் 20 நாடுகளில் தோல் பாவை நிழற்கூத்து பழக்கம் உள்ளது. இதில் சீனா தோல் பாவை நிழற்கூத்து மிகவும் புகழ் பெற்றதாகும்.

தோல் பாவை நிழற்கூத்தில் சூர்பநகையும் லட்சுமணனும்
தோல் பாவை நிழற்கூத்து படங்கள்
தோல் பாவை நிழற்கூத்து படங்கள் செய்ய பதப்படுத்தப்பட்ட ஆட்டின் தோல்
தோல் பாவை நிழற்கூத்து : பின்புறம்
தோல் பாவை நிழற்கூத்திற்கு தயாராகும் கலைஞர்
தோல் பாவை நிழற்கூத்து திரை செய்யபடுகிறது
தோல் பாவை நிழற்கூத்தின் திரை
தோல் பாவை நிழற்கூத்து நடக்கிறது
தோல் பாவை நிழற்கூத்து நடத்தும் குடும்பம்


தமிழகத்தில் தோல் பாவை நிழற்கூத்து தொகு

தமிழகத்தில் தோல் பாவை நிழற்கூத்து தஞ்சாவூரை ஆண்ட சரபோசி மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. இன்றும் தமிழகத்தில் இக்கலையை நடத்துபவர்கள் மராட்டி மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள். இக்கூத்துக்கலையை தெரிந்தவர்கள் மிகவும் குறைவானவர்களே ஆவார் (30க்கும் குறைந்த குடும்பங்கள்). இக்கலை இப்போது நலிவடைந்த நிலையில் உள்ளது.

தோல் பாவை நிழற்கூத்திற்கு தேவையானவை தொகு

 • தோலில் வரைந்து வெட்டப்பட்ட உருவங்கள்
 • வெள்ளை நிறத்திரை
 • ஆர்மோனியம்
 • டோலாக்கு(மோளம்)
 • திரைக்கு பின் ஒளி

தோல் பாவை நிழற்கூத்தில் நடத்தப்படும் கதைகள் தொகு

 • இராமயணம்
 • மகாபாரதம்
 • அரிசந்திரா கதை
 • நல்ல தங்காள் கதை
 • மயில் ராவணன் கதை
 • வள்ளி திருமணம்

தற்போதைய தேவைக்கேற்ப பல சமுதாய விழிப்புணர்வு கதைகளும் இதில் நடத்தப்படுகிறது. இதில் சாலை விதி கடைபிடித்தல், தீண்டாமை கொடுமை, நுகர்வோர் நலன், சுற்றுபுற சூழல் பாதுகாப்பு, எய்ட்சு நோய் விழிப்புணர்வு போன்றவைகளும் அடங்கும்.

தோல் பாவை நிழற்கூத்து கலைஞர்களின் நிலை தொகு

1980களுக்கு பிறகு தொலைகாட்சிகளின் வருகையால் தோல் பாவை நிழற்கூத்து கலைஞர்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. மேலும் சாதி சான்றிதல் இல்லாமை, வீட்டு வசதி இல்லாமை போன்ற பிரச்சனைகளும் இவர்களுக்கு உண்டு. இக்கலைஞர்கள் பொரும்பாலும் தங்களின் பூர்விக தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில்களுக்கு செல்லத் தொடங்கிவிட்டார்கள். இவர்கள் தேனி மாவட்டத்தில் அதிக தொகையில் வசிக்கிறார்கள். தமிழகத்தின் தோல் பாவை நிழற்கூத்து குழுக்களில் தேனியை சேர்ந்த "முத்து லச்சுமண ராவ் குழு" மிகவும் புகழ் பெற்றதாகும்.