த வேர்ஜின் ஸ்பிரிங்

தி விர்ஜின் ஸ்பிரிங் (The Virgin Spring (சுவீடிய: Jungfrukällan) என்பது 1960 ஆண்டைய  ஸ்வீடியத் திரைப்படமாகும். இப்படத்தை இங்மார் பேர்ஜ்மன் இயக்கியுள்ளார். இடைக்கால ஸ்வீடனில் நடப்பதாக காட்டப்படும் கதையில், ஒரு சிறுமி கற்பழித்துக் கொல்லப்படுகிறாள். அந்தக் கற்பழிப்பு  மற்றும் கொலையை நிகழ்த்தியவர்களை அச்சிறுமியின்  தந்தை பழிவாங்குவதே கதை. 13 ஆம் நூற்றாண்டு ஸ்வீடியப் பாடலாசிரியரான "டோரெஸ் டோடர்ரர் ஐ வான்" ("டாரின் மகள் வாங்") என்ற கதைப்பாடலை எழுதியுள்ளார். இக்கதையைத் தழுவி பெர்ஜ்மன் இத்திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்தத் திரைப்படம்  அறக் கேள்விகள், பழிவாங்குதல் மற்றும் சமய நம்பிக்கைகள் போன்ற பலவிதமான கருப்பொருள்களைக் கொண்டுள்ளது.

தி விர்ஜின் ஸ்பிரிங்
The Virgin Spring
இயக்கம்இங்மார் பேர்ஜ்மன்
தயாரிப்புஇங்மார் பெர்க்மன்
அல்லன் ஏக்கௌண்ட்
கதைஉல்லா இஸாக்ஸன்
இசைஎரிக் நோர்கிரன்
நடிப்புமேக்ஸ் வொன் சிடோவ்
பிர்ஜிட்டா வால்பர்க்
குன்னெல் லிண்ட் பிளோம்
பிர்கிட்டா பேட்டர்சன்
ஒளிப்பதிவுஸ்வென் நைக்விஸ்ட்
படத்தொகுப்புஆஸ்கார் ரோசந்தர்
விநியோகம்ஜானஸ் பிலிம்ஸ்
வெளியீடு8 பெப்ரவரி 1960 (1960-02-08)
ஓட்டம்89 நிமிடங்கள்
நாடுஸ்வீடன்
மொழிசுவீடிய மொழி
மொத்த வருவாய்$700,000 (USA)[1]

இந்தப் படமானது 1961 ஆம் ஆண்டு சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது.[2] மேலும் இப்படமானது 1972 ஆம் ஆண்டையத் திகில் திரைப்படமான தி லாஸ்ட் ஹவுஸ் படத்துக்கு அடிப்படையானது ஆகும். 

மேற்கோள்கள்தொகு

  1. Balio 1987, ப. 231.
  2. புவி (20 ஏப்ரல் 2018). "இந்தக் கதறலும் துயரமும் என்றைக்கு முடிவுக்கு வரும்?". கட்டுரை. தி இந்து தமிழ். 21 ஏப்ரல் 2018 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_வேர்ஜின்_ஸ்பிரிங்&oldid=3577399" இருந்து மீள்விக்கப்பட்டது