நகர்ப்புறத் தோட்டக்கலை
தோட்டக்கலை என்பது பழப்பயிர்கள், காய்கறிகள், மலர்கள், அலங்காரத் தாவரங்கள், மருத்துவத் தாவரங்களைப் பற்றி படிக்கும் நவீன அறிவியல் மற்றும் கலையாகும்[1] நகர்ப்புறத் தோட்டக்கலை (Urban horticulture) என்பது நகர்புறச்சூழலுக்கும் தோட்டச் செடிகளுக்கும் உள்ள தொடர்பைக் கூறுகிறது. தோட்டக்கலையைப் பயன்படுத்தி நகர்புறத்தினை மேம்படுத்துவதும் நிலைநிறுத்துவதும் இதன் நோக்கமாகும் [2]. மாநகரங்கள் விரிவடைதல் மற்றும் கிராமங்கள் நகரமாக மாற்றப்படுதல் ஆகியவற்றால் இந்தத் துறை மிகுந்த வளர்ச்சிபெறுகிறது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற தோட்டக்கலை
தொகுதமிழ்நாட்டில் நகர்ப்புற தோட்டக்கலை தமிழக அரசின் மூலமும் தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் மூலமாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது
தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு அரசு
தொகுதமிழக அரசு தோட்டக்கலையை மாநகராட்சிகளில் அதிகரிக்க திட்டங்களை வகுத்துள்ளது. அவற்றுள் நகர்ப்புற தோட்டக்கலை அபிவிருதித்திட்டமும் ஒன்றாகும்
நகர்ப்புறத் தோட்டக்கலை அபிவிருத்திட்டம்
தொகுவீட்டின் மாடியில் தோட்டம் அமைக்க இத்திட்டத்தின் கீழ் ”நீங்களே செய்யலாம் மூட்டை முடிச்சுப் பை” (do it yourself kit)[3] 50 சத மானியத்தில் கொடுக்கப்படுகிறது. இதன் விலை மானியம் போக ரூபாய் 1300 ஆகும். இதில் 16 சதுர மீட்டர் அளவு கொண்ட நெகிழிப் படுதா (வீட்டின் கூரையை மழையிலிருந்து பாதுகாக்க), 10 வகையான விதைகள், மக்கிய தென்னைமஞ்சு, கைதெளிப்பான் போன்றவை உள்ளன.
நகர்புற தோட்டக்கலை வளர்ச்சிமையம், சென்னை
தொகு"உயர் தொழில்நுட்ப தோட்டக்கலையின் தமிழ் நாடு வேளாண்மைப்பல்கலைகழக தகவல் மற்றும் பயிற்சி மையமாக" 2000 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இதில் நகரத்தில் சுயதொழில் புரிவோர், வேலையில்லாப் பட்டதாரிகள், அரசுசாராஅமைப்பினர், வீட்டிலிருக்கும் பெண்கள் ஆகியோருக்கு பயிற்சியளிக்கப்படுகிறது[4]. இம்மையம், 2011 ஆம் ஆண்டு "தமிழ் நாடு வேளாண்மைப்பல்கலைகழக தகவல் மற்றும் பயிற்சி மையம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
பயிற்சிகள்
தொகுவீட்டுக்காய்கறித்தோட்டம் அமைத்தல், வீட்டுக்கூரைத்தோட்டம், மலர்ஜோடித்தல், வீட்டினுள் அலங்காரத்தாவரம் வளர்ப்பு, பொன்சாய் வளர்ப்பு, மூலிகைத் தாவரங்கள் வளர்ப்பு, இயற்கை வேளாண்மையில் பழம் மற்றும் காய்கறி சாகுபடி, வாசனைத்திரவியங்கள் தயாரிப்பு, பழம் மற்றும் காய்கறி பதனப்படுத்துதல், காளான்சாகுபடி, மண்புழு உர உற்பத்தி, பால் பொருட்கள் தயாரிப்பு போன்ற பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது[5].
இப்பயிற்சிக்காகப் பொதுமக்களுக்கு ரூபாய் 400ம்[5], சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 300ம், மாணவர்களுக்கு ரூபாய் 200ம் பயிற்சிக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
மேற்கோள்கள்
தொகு- ↑ Relf, Diane. "Human Issues In Horticulture". Virgnia Tech. Department of Horticulture. Retrieved6 October 2014.
- ↑ Tukey, HB Jr. (1983). "Urban horticulture: horticulture for populated areas". HortScience: 11–13.
- ↑ http://www.newindianexpress.com/cities/chennai/Turn-your-terrace-into-a-kitchen-garden/2013/12/23/article1959691.ece
- ↑ http://agritech.tnau.ac.in/about_us/abt_us_reserach_chennaiuh.html
- ↑ 5.0 5.1 http://agritech.tnau.ac.in/about_us/abt_us_research_chennai.html