நகோடி (Nagodi) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் உள்ள ஒரு மலை கிராமம் ஆகும். [1] இது கொல்லூரில் இருந்து சிமோகாவை நோக்கி செல்லும் சாலையில் 14 வது கிலோ மீட்டரில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடசாத்ரி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் பிரமிக்க வைக்கும் இயற்கை அழகால் சூழப்பட்ட கிராமம் ஆகும். குறிப்பாக குளிர்காலத்தில் இப்பகுதி முழுவதும் மூடுபனியுடன் இருக்கும் போது ரம்மியமாக காட்சியளிக்கும். இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் முதன்மையாக விவசாயத்தை நம்பியுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Siraj, S. Anees (2012). Karnataka State: Shimoga District (in ஆங்கிலம்). Government of Karnataka, Karnataka Gazetteer Department.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகோடி&oldid=4098260" இலிருந்து மீள்விக்கப்பட்டது