நக்டா, இராஜஸ்தான்

நக்டா (Nagda) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் உதயபூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஊராகும்.[1]நக்டா, துவக்க காலத்தில் உதய்பூர் இராச்சியத்தின் முதலாவது தலைநகரமாக விளங்கியது. இவ்வூரில் புகழ்பெற்ற சகஸ்கர பாகு கோயில்கள் உள்ளது.

நக்டா கிராமத்தின் சிதிலமடைந்த சகஸ்கர பாகு கோயில்கள்

அமைவிடம் தொகு

உதய்ப்பூரிலிருந்து வடக்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் நக்டா கிராமம் அமைந்துள்ளது.

வரலாறு தொகு

உதய்பூர் இராச்சியத்தின் கெலாட் வம்ச இராஜபுத்திர குல மன்னர்கள் முதலில் நக்டா நகரத்தை 7-ஆம் நூற்றாண்டில் நிறுவி, அதனை 948-ஆம் வரை தலைநகராகக் கொண்டனர்.[2]

மக்கள் தொகை தொகு

நக்டா கிராமத்தின் தற்போதைய மக்கள் தொகை 237 ஆகும்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "District Census Handbook Udaipur, Village and Town Wise Primary Census Abstract Part XII-B". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. Jain, Kailash Chand (1972). Ancient Cities and Towns of Rajasthan, A Study of Culture and Civilization. Motilal Banarsidass. பக். 213-219. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=நக்டா,_இராஜஸ்தான்&oldid=3292950" இலிருந்து மீள்விக்கப்பட்டது