நஞ்சீயர்
நஞ்சீயர் எனும் வைணவப் பெரியவர் திருநாராயணபுரம் (தற்போதைய மேல்கோட்டை) எனும் ஊரில் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஸ்ரீ மாதவர் எனும் இயற்பெயரோடு பிறந்தார். 12-ஆம் நூற்றாண்டின் சிறந்த வைணவத் தமிழ் உரையாசிரியர்களுள் ஒருவர். வைணவத் தமிழ் இலக்கியத்திற்கு இவரது பங்களிப்புக் கணிசமானது..[1]
நஞ்சீயர் | |
---|---|
பிறப்பு | ஸ்ரீ மாதவர் திருநாராயணபுரம் |
இறப்பு | திருவரங்கம், தமிழ்நாடு |
வாழ்க்கைக்குறிப்பு
தொகுமாதவாச்சாரியர் எனும் சிறந்த அத்வைதி ஆகிய இவரைப் பராசர பட்டர் மூலம் விசிஷ்டாத்வைத கொள்கைக்கு மாற்றியருளினார் இராமானுசர். பராசர பட்டருக்குச் சீடராக அவருடனே திருவரங்கம் சென்று இலக்கிய பணிகளை மேற்கொண்டார்.
பிறபெயர்கள்
தொகு- நஞ்சீயர் ( பராசர பட்டர் வழங்கியது)
- நிகமாந்த யோகி
- வேதாந்தி
இலக்கிய படைப்புகள்
தொகு- திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி வியாக்கியானம்
- கண்ணிநுண் சிறுதாம்பு வியாக்கியானம்
- திருப்பாவை ஈராயிரப்படி
- திருவந்தாதி வியாக்கியானம்
- திருப்பல்லாண்டு வியாக்கியானம்
- ரகஸ்யத்ரயவிவரணம் வியாக்கியானம்
- நூற்றெட்டு சரணாகதி கத்யத்ரய வியாக்கியானம்
சிறப்பு
தொகுதன் வாழ்நாளில் திராவிட வேதமாகிய நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் அங்கமாகிய திருவாய்மொழிக்கு நூறு முறைக்குமேல் காலட்சேபம் செய்தருளினார் என்பது இவரின் சிறப்பு.
மேற்கோள்கள்
தொகுகருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
வெளி இணைப்புகள்
தொகு- வியாக்கியான இலக்கியம் http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60512233&format=print&edition_id=20051223 பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்