நடத்தைக்குரிய பகுப்பாய்வியல்

நடத்தைக்குரிய பகுப்பாய்வியல் (behavioral analytics) என்பது வணிகப் பகுப்பாய்வியலின் ஒரு பகுதியாகும். இது பொதுவாக மின் வாணிகம், சமூக வலைத்தலங்களில் பயனர்களின் நடத்தைக்குரிய விடயங்களை அறிய உதவுகிறது. நடத்தைக்குரிய பகுப்பாய்வியல் இணையப் பயன்பாட்டில், மின் வாணிக பயனர்களின் தகவல்களை கூகிள் பகுப்பாய்வியல் கருவி மூலம் பகுப்பாய உதவுகிறது.

எடுத்துக்காட்டுகள் தொகு

  • அமெசான்.காம் தனது பயனர்கள் வாங்கும் பொருட்களை வைத்து அவர்களுக்கு வேறு சில பொருட்களை பரிந்துரை செய்கிறது.
  • வங்கிகள் நடைத்தைக்குரிய பகுப்பாய்வின் மூலம் புதிய வாடிக்கையாளர்களை உருவாக்குகின்றனர்.

வகைகள் தொகு

  • மின் வாணிகம் மற்றும் சில்லறை வணிகம் - தயாரிப்பு பரிந்துரைகள் மற்றும் எதிர்கால விற்பனைப் போக்குகளைல் கணிப்பதற்காக
  • இணைப்பிலுள்ள விளையாட்டுக்கள் - எதிர்கால வெளியீடுகளில் பயன்பாட்டின் போக்குகள், சுமை, மற்றும் பயனர் விருப்பத்தைக் கணிப்பதற்காக
  • குழு பகுப்பாய்வியல் - பயனர் குழுவின் நடத்தையை வைத்து அவர்களின் செயல்பாடுகளையும் நடத்தையையும் புரிய முற்படுதல்