நந்தோத்ஸவா

நந்தோத்ஸவா என்பது கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் ஜென்மாஷ்டமி பண்டிகைக்கு மறுநாள் கொண்டாடப்படும் விழாவாகும். குழந்தை கிருஷ்ணரைப் பார்க்கவும், அவரது தாயான யசோதாவை வாழ்த்தவும் பிரஜ் கிராம மக்கள், துறவிகள் மற்றும் முனிவர்கள் அனைவரும் நந்தசேனனின் வீட்டிற்குச் சென்று வாழ்த்துக்களைக் கூறி தங்கள் ஆசிகளை வழங்கியதாக நம்பப்படுகிறது.வாழ்த்த வந்த அனைவருக்கும் பல்வேறு ஆபரணங்கள், ஆடைகள், கால்நடைகள் மற்றும் பல மதிப்புமிக்க பொருட்களை பதிலுக்கு பரிசளித்ததாக நம்பப்படுகிறது. [1]

உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள விருந்தாவனத்தில் உள்ள கிருஷ்ணரின் பல்வேறு கோவில்களில் இவ்விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. [2]

பகவான் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் அவரது உருவ சிலைகளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகமும், மகா ஆரத்தியும் காட்டப்பட்டு சடங்குகள் செய்யப்படுகின்றன. [3] இந்த நாளில் மக்கள் ' கோவிந்தா ' - எனப்படும் குழுக்களை உருவாக்கி, உயரமான கட்டிடங்களில் கயிற்றில் கட்டப்பட்ட சிறு பானைகளை கம்புகளைக் கொண்டு உடைக்கின்றனர்.

வெளி இணைப்புகள் தொகு

  1. "Nandotsava". iskcondesiretree.com. பார்க்கப்பட்ட நாள் 3 November 2020.
  2. "Sri Krishna Janmastmi". ISKCON Vrindavan. பார்க்கப்பட்ட நாள் 3 November 2020.
  3. "Nandotsava". ISKCON Punjabi Bagh. 8 May 2020. பார்க்கப்பட்ட நாள் 3 November 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தோத்ஸவா&oldid=3699203" இலிருந்து மீள்விக்கப்பட்டது