நன்மங்கலம் ஏரி

நன்மங்கலம் ஏரி (Nanmangalam Lake), சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்டு,  நன்மங்கலம் வனப் பகுதியின் எல்லையில் சுமார் 3.04 கிலோ மீட்டர் பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியானது கோடை காலத்தில், இப்பகுதியினைச் சுற்றியுள்ள செம்பாக்கம், அஸ்தினாபுரம், நன்மங்கலம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது.[1][2]

மாசுபடுதல் தொகு

முன்னர் இந்த ஏரியின் நீரானது குடிநீர், விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் மாநகராட்சிக் கழிவுகள் இந்த ஏரியில் கொட்டப்படுவதால் ஏரி மாசடைந்து வருகின்றது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Nanmangalam Lake". in.geoview.info. பார்க்கப்பட்ட நாள் 11 February 2022.
  2. YAMUNA, R. "Living near a lake, but no water". DECCAN CHRONICLE. DECCAN CHRONICLE. பார்க்கப்பட்ட நாள் 11 February 2022.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-02-11. பார்க்கப்பட்ட நாள் 2022-02-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்மங்கலம்_ஏரி&oldid=3872299" இலிருந்து மீள்விக்கப்பட்டது