நம்தாங் கல் பாலம்

நம்தாங் கல் பாலம் (Namdang Stone Bridge) என்பது இந்தியாவில் அசாமில் சிவசாகரிலிருந்து ஒரு சில கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள ஒரு பாலம் ஆகும். 1703 ஆம் ஆண்டில் அஹோம் மன்னர் ருத்ரா சிங்காவின் காலத்தில் வங்காளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கைவினைஞர்களால் இது கட்டப்பட்டது. இந்தப் பாலத்தின் நீளமானது 60 மீட்டர் (200 அடி) ஆகும். இதன் அகலம் 6.5 மீட்டர் (21 அடி) மற்றும் இதன் உயரம் 1.7 மீட்டரும் ஆகும். இது டிகௌ ஆற்றின் கிளை நதியான நம்தாங் ஆற்றின் மீது அமைந்துள்ளது.தற்போதைய தேசிய நெடுஞ்சாலை 2 (இந்தியா) இதன் வழியாகச் செல்கிறது.பாலத்தின் தனித்துவமான சிறப்பியல்பு என்னவென்றால், அது நூறு வயதுடைய ஒரு திடமான பாறையிலிருந்து வெட்டப்பட்டது என்பதாகும்.

நம்தாங் கல் பாலம்
தாண்டுவது நம்தாங் ஆறு
இடம் சிப்சாகர், அசாம்
பராமரிப்பு அசாம் மாநில அரசு
வடிவமைப்பு வளை பாலம்
கட்டுமானப் பொருள் கல்
மொத்த நீளம் 60 மீ
அகலம் 6.5 மீ
உயரம் 1.7 மீ
கட்டுமானம் முடிந்த தேதி 1703
அமைவு 26°57′01″N 94°32′43″E / 26.9503891°N 94.5451547°E / 26.9503891; 94.5451547

இந்தப் பாலமானது சற்றே வளைந்த வடிவத்தில் உள்ளது. இந்த பாலம் சிப்சாகர் நகரத்தை ஜோர்ஹாட் மற்றும் மேற்கில் உள்ள பிற மாவட்டங்களுடன் இணைக்கிறது.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Namdang Stone Bridge". Maps Of India. Archived from the original on 4 June 2009. பார்க்கப்பட்ட நாள் 25 April 2010.
  2. Sajnani, Manohar. "Management Resources". Encyclopaedia of tourism resources in India. Vol. 1. p. 20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்தாங்_கல்_பாலம்&oldid=3115192" இலிருந்து மீள்விக்கப்பட்டது