நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன் ஒரு இந்திய அரசியல்வாதி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001ல் திருநெல்வேலியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1] மேலும் 2011 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  2016 சட்டமன்றத் தேர்தலில்ல்  திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக போட்டியிட்ட எதிர் போட்டியாளர் ஏ. எல். எஸ். லஷ்மணன் என்பவரிடம் 601 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2011 சட்டமன்ற தேர்தலில் நைனார் நாகேந்திரன் இதே தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக போட்டியிட்ட ஏ. எல். எஸ். லஷ்மணன் என்பவரை 3800 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.[2]

நயினார் நாகேந்திரன்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
02 மே 2021
தொகுதி திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 16, 1960(1960-10-16)
பணகுடி, தண்டையார்குளம், திருநெல்வேலி
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சந்திரா
பிள்ளைகள் நயினார் பாலாஜி
விஜய் சண்முக நயினார்
காயத்ரி

நைனார் நாகேந்திரன் 2001-2006வரை நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க கட்சி ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராகவும், தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். [சான்று தேவை] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் இருந்து பாசக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நயினார்_நாகேந்திரன்&oldid=3145236" இருந்து மீள்விக்கப்பட்டது