நரிப் பழம்

வகைப்பாடு தொகு

தாவரவியல் பெயர் : கிட்நோரா எஸ்குலேண்டா Hydnora esculenta

குடும்பம் : கிட்நோரேசியீ (Hydnoraceae)

இதரப் பெயர் தொகு

  • பப்பூன்ஸ் உணவு (Hydnoraceae)
 
நரிப் பழச்செடி

செடியின் அமைவு தொகு

இது ஒரு ஒட்டுண்ணிச் செடியாகும். இதனுடைய வேர் சவுக்கு மரம், அக்கேசியா போன்ற மரங்களின் வேர்களில் புகுந்து உணவை உறிஞ்சிகின்றன. இது தரையின் அடியிலேயே இருக்கிறது. செடி தரைக்கு மேல் வருவதில்லை. இதற்கு இலைகள் கிடையாது. இதனுடைய தண்டு தரையின் உள்ளே 10 அடி நீளத்திற்கு இருக்கிறது. தண்டின் பட்டை தோல் போல் உள்ளது. இதனுடைய பூ வித்தியாசமானது. எப்போது பூ வெடிக்குமோ அப்போது மட்டுமே தரைக்கு மேல் வெளியே வந்து வெடிக்கிறது. இத தடிப்பாக தோல் போல் உள்ளது. இப்பூவின் வெளிப்புறம் செம்பழுப்பு நிறத்திலும் உள்பகுதி இளம் சிவப்பு நிறத்திலும் உள்ளது. இதன் பிறகு தரையின் கீழ் உருண்டையான பழம் உருவாகிறது. இப்பழம் நரிக்கு நன்கு பிடிக்கும். மேலும் இப்பழத்தை வாலில்லாக்குரங்கு (Babboon) தேடி இவற்றை சாப்பிடுகிறது. இச்செடி தென் அமெரிக்காவில் வாழ்கிறது.

 
இளம் விதைகள்

மேற்கோள் தொகு

[1] | 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரிப்_பழம்&oldid=3881659" இலிருந்து மீள்விக்கப்பட்டது