நல்ல நேரம்
நல்லநேரம் (Nalla Neram) 1972 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்திலும் சாண்டோ எம். எம். ஏ. சின்னப்பா தேவர் தயாரிப்பிலும் வெளிவந்த இப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், கே. ஆர். விஜயா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1971 இல் வெளிவந்த ஹாத்தி மேரே சாதி என்ற இந்தித் திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். இத்திரைப்படம் 1972 மார்ச் 10 அன்று வெளியிடப்பட்டது.[1] இத்திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்டு ஒரு பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
நல்ல நேரம் | |
---|---|
நல்ல நேரம் | |
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தேவர் பிலிம்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் கே. ஆர். விஜயா |
வெளியீடு | மார்ச்சு 10, 1972 |
நீளம் | 4465 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
தொகுராஜா "ராஜூ" குமார் யானைகளை சொந்தமாக வைத்திருக்கிறார். யானகளிடம் தந்திரங்களைச் செய்ய வைப்பதன் மூலம் வாழ்வாதாரத்தைப் பெறுகிறார். அவர் விஜயாவை காதலிக்கிறார். அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் விரைவில், ஒரு சிக்கல் எழுகிறது. விஜயா தனது வாழ்க்கையில் ஒரு தனிப்பட்ட சோகத்தின் காரணமாக யானைகளை வெறுக்கிறார். ராஜு தனது யானை நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதாக விஜயா உணர்கிறார். ராஜூ தனது மனைவியின் அன்பிற்கும், தனது விசுவாசமான, அர்ப்பணிப்புள்ள செல்ல யானைகளின் நட்பிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டியிருந்தது.
நடிகர்கள்
தொகுநடிகர் | பாத்திரம் |
---|---|
எம். ஜி. ராமச்சந்திரன் | ராஜா "ராஜூ" குமார், ஒரு தொழிலதிபர் |
எஸ். ஏ. அசோகன் | தர்மலிங்கம், விஜயாவின் தந்தை |
மேஜர் சுந்தரராஜன் | வேலு, விலங்குகளின் பயிற்சியாளர் |
தேங்காய் சீனிவாசன் | ராஜூவின் கணக்காளர் |
எஸ். வி. இராமதாஸ் | ராஜாவின் தந்தை |
வி. கோபாலகிருஷ்ணன் | பரமசிவன் |
ஜஸ்டின் | வேலுவைப் பணியமர்த்தியவர் |
எம். எம். ஏ. சின்னப்பா தேவர் | ரங்கா, ஒரு கண்காட்சி பொழுதுபோக்காளரும், வேலுவின் உதவியாளரும் |
நாகேஷ் | ராஜுவின் நண்பரும், கேளிக்கை மைதானத்தில் பொழுதுபோக்கு செய்பவருமான முருகன் |
கே. ஆர். விஜயா | விஜயா என்ற விஜி, ராஜூவின் மனைவி |
சச்சு | வள்ளி, முருகனின் காதலன் |
ராதிகா | வேலுவின் குத்துப்பாட்டுப் பெண் நடனக் கலைஞர் |
"கோவளம்" காமாட்சி | |
மாஸ்டர் ராஜூ குமார் | ராஜூ, குழந்தை |
4 யானைகள் (குறிப்பிடப்படவில்லை) | இராமு (ராஜூவின் பிடித்த நண்பர்) கங்கா, மீனா, சோமு. |
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[2]
பாடல். | பாடகர்(கள்). | பாடல் வரிகள் | நீளம் |
---|---|---|---|
"ஆகட்டும்டா தம்பி ராஜா" | டி. எம். சௌந்தரராஜன் | அவினாசி மணி | 03:05 |
"நீ தொட்டால்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் | 03:22 |
"ஓடி ஓடி உழைக்கணும்" | டி. எம். சௌந்தரராஜன் | புலமைப்பித்தன் | 03:11 |
"டிக் டிக்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் | 03:12 |
நடன இசை | இசைக்கருவி | - | 02:19 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் பட்டியல்". Ithayakkani. 2 April 2011. Archived from the original on 14 November 2018. பார்க்கப்பட்ட நாள் 17 April 2021.
- ↑ "Nalla Neram (1972)". Raaga.com. Archived from the original on 26 January 2012. பார்க்கப்பட்ட நாள் 9 June 2014.