நல்ல வண்ணம் வாழலாம் (நூல்)

நல்ல வண்ணம் வாழலாம் என்னும் நூல் சுகி. சிவம் என்பவரால் எழுதப்பட்டது. அவர் கல்கி இதழில் எழுதிய சமயக் கட்டுரைகள் பதினாறின் தொகுப்பே இந்நூல் ஆகும். இந்நூலிற்கு சிலம்பொலி சு. செல்லப்பன் அணிந்துரை வழங்கி இருக்கிறார். அவர் அவ்வணிந்துரையில், “சுகி. சிவத்தின் கட்டுரைகள் தம் உட்பொருளைத் தெளிவு வெளிப்படுத்துகின்ற மணிநீர்க் குளங்களாகும்” என இந்நூலில் உள்ள கட்டுரைகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

நல்ல வண்ணம் வாழலாம்
நூல் பெயர்:நல்ல வண்ணம் வாழலாம்
ஆசிரியர்(கள்):சுகி. சிவம்
வகை:கட்டுரை
துறை:சமயம்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:112
பதிப்பகர்:கற்பகம் புத்தகாலயம்,
4/2 சுந்தரம் தெரு,
தியாகராயர் நகர்,
சென்னை 600 017
பதிப்பு:மு.பதிப்பு நவம்பர் 2001
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

உள்ளடக்கம் தொகு

  1. அணிந்துரை – சிலம்பொலி சு. செல்லப்பன்
  2. என்னுரை – சுகி. சிவம்
  3. நல்ல தொடக்கம்
  4. எது வீரம்?
  5. பக்திப் பண்ணையில் வீர விவசாயம்
  6. படிப்பு வேறு; அறிவு வேறு
  7. “எதிர்பாராதே… துன்பப்படாதே!”
  8. உங்களது உயரம், உள்ளத்தின் உயரம்
  9. உயர்வும் தாழ்வும்
  10. இல்லறத்தாருக்கு இரண்டு மந்திரங்கள்
  11. நெஞ்சக் கோயில்
  12. சுய விமர்சனம் – சுய தரிசனம்
  13. குடிசை வாசலில் ஒரு சக்கரவர்த்தி
  14. பணம் சம்பாதிப்பது எப்படி?
  15. சம்சார சாகரம்
  16. கடவுளையே பதறவைத்த கண்ணப்பன்
  17. இருமுடி சுமப்பது எதற்கு?
  18. திருவடிச் சிறப்பு

நூலுள் நுவலும் செய்திகள் தொகு

  • அழகாய் இருக்க ஆசைப்படு. அழகை இழந்தாவது அடுத்தவர்க்குப் பயன்படு
  • யார் தலைவனுக்குத் தலைவனோ, அவந்தான் தொண்டருக்குத் தொண்டன்.
  • பாதுகாப்பு உடைகள் பயத்தின் வெளிப்பாடு. ஆயுதங்களோ அமைதி இன்மையின் அடையாளம்
  • எதிர்க்க எவனுமே இல்லை என்ற மனோநிலையில் அச்சமின்றி ஆயுதமின்றி நிற்பவரே மகாவீரர்.