நவல்ராய் மணிக்கூண்டு கோபுரம், ஐதராபாத்து
நவல்ராய் மணிக்கூண்டு கோபுரம், ஐதராபாத்து (Navalrai Clock Tower, Hyderabad) பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் தலைநகரமான ஐதராபாத்தில் அமைந்துள்ளது. காண்டா கர், சந்தை மணிக்கூண்டு கோபுரம் என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது.[1][2]
வரலாறு
தொகுநவல்ராய் மணிக்கூண்டு கோபுரம் 1914 ஆம் ஆண்டு இராபாத்தில் மீன் மற்றும் இறைச்சி சந்தையுடன் கட்டப்பட்டது.[3] அப்போது இப்பகுதியில் பணியிலிருந்த ஆட்சியரின் பெயர் இம்மணிகூண்டுக்கு சூட்டப்பட்டது.[2] சர் ராவ் பகதூர் திவான் சந்த் தயாராம் தலைவராக இருந்தபோது ஐதராபாத்து மாநகராட்சி ஆணையம் இந்த கோபுரத்தை கட்டியது. பி.சி ததானி என்பவரால் கட்டிடம் வடிவமைக்கப்பட்டது.[1][2] கட்டுமானத்தின் போது பயன்படுத்தப்பட்ட கற்கள் தில்லியிலிருந்து இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.[1]
1990 ஆம் ஆண்டுகளில் கோபுரமும் அதன் மண்டபங்களும் புதுப்பிக்கப்பட்டன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Shadows of the past | Footloose | thenews.com.pk". The News International.
- ↑ 2.0 2.1 2.2 Hafeez, Akhtar (September 24, 2020). "A Tale of Two Clock Towers". The Friday Times.
- ↑ "Navalrai Clock Tower, Hyderabad".