நாகநாதன் வேலுப்பிள்ளை
நாகநாதன் வேலுப்பிள்ளை ஈழத்து, மற்றும் பிரெஞ்சு எழுத்தாளர். இவர் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, சிங்களம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். இருபத்துமூன்று ஆண்டுகளுக்கு மேலாக பிரெஞ்சு அரசாங்க சேவையில், மும்பையில் அமைந்த தூதரக அலுவலகத்தில் வர்த்தக சேவையில் சட்ட ஆலோசகராக பணிபுரிந்தவர். இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்புகளை விருத்தி செய்யவும், இந்தியாவில் முதலீடு செய்யவும் விளைந்த பிரெஞ்சுக் கம்பெனிகளுக்கு சர்வதேச வர்த்தக நெறிகளுக்கு அமைய சட்டஆலோசனைகளை வழங்குபவர்.
நாகநாதன் வேலுப்பிள்ளை | |
---|---|
பிறப்பு | புலோலிமேற்கு, ஆத்தியடி. பருத்தித்துறை, யாழ்ப்பாணம் |
பணியகம் | அரசபணி |
அறியப்படுவது | சட்டத்தரணி, சட்டஆலோசகர், எழுத்தாளர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | நாகநாதன் |
குடும்பவிபரம்
தொகுஇவர் இலங்கையின் வட மாகாணத்தில் பருத்தித்துறை, மேலைப்புலோலியூரில் அமைந்துள்ள ஆத்தியடி என்ற சிற்றூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பருத்தித்துறை நகரசபையின் துணை முதல்வராக இருந்த காலஞ்சென்ற நாகநாதன், ஈஸ்வரி ஆகியோரின் புதல்வரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் கலைப்பீடாதிபதியான பேராசிரியர் ஞானகுமாரனின் சகோதரரும் ஆவார்.
எழுத்துலக வாழ்வு
தொகுபிரெஞ்சு மொழியில் பாண்டித்தியம் பெற்றவரான இவர் பிரெஞ்சு அரசாங்கத்துக்காக பல நூல்களைப் பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ளார். நானூற்று பன்னிரெண்டு பக்கங்கள் கொண்ட, இந்தியாவில் முதலீடு செய்தல் தொடர்பான இவரது நூல் பிரெஞ்சுக் கம்பெனிகள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றது. வெளிநாட்டு முதலீடு, ஏற்றுமதி-இறக்குமதி என்னும் விடயங்கள் பற்றிய பிரெஞ்சுமொழி நூல்களுள், இந்த நூல் கணினிவழி விற்பனை நிறுவனமான 'அமேசன்' நிறுவனத்தின் சிறந்த விற்பனைப் பட்டியலில் நீண்டகாலம் தொடர்ச்சியாக முதல் நூறு இடங்களுள் ஓர் இடத்தைப் பெற்று வந்துள்ளது. 2007-இல் பிரசுரிக்கப்பட்ட இந்த நூல் 2010-இல் மாற்றீடு செய்யப்பட்ட பின்னரும், புதிய நூலுடன் இந்த நூலும் முதல் நூறு இடங்களுள் இடம் பெற்றுள்ளது.
விருதுகள்
தொகுஇவரது சேவைகளைப் பாராட்டும் முகமாக பிரெஞ்சு அரசாங்கம் 'செவாலியர்' என்னும் விருதை இவருக்கு வழங்கவுள்ளது. இந்த விருது கொழும்பில் வைத்து சூன் மாதம் 27ஆந் தேதி வழங்கப்படவுள்ளது.
தொழில்
தொகுவெளிவந்த நூல்கள்
தொகு- S'implanter en Inde (14.10.2008)