நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)
நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி (Nagapattinam Assembly constituency), நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நேருக்குநேர் மோதுகிறது. இத்தொகுதி நாகப்பட்டினம் வட்டத்தின், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருமருகல் ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கியது. மேலும் நாகப்பட்டினம் நகராட்சி, திட்டச்சேரி பேரூராட்சியும் உள்ளது.[2]
நாகப்பட்டினம் | |
---|---|
![]() | |
தொகுதி பற்றிய தகவல்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
மக்களவைத் தொகுதி | நாகப்பட்டினம் |
தொடக்கம் | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 1,97,901[1] |
இட ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | ஆளூர் ஷா நவாஸ் |
கட்சி | விடுதலை சிறுத்தைகள் கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் தொகு
- நாகப்பட்டினம் வட்டம் (பகுதி)
கொங்கராயநல்லூர், அம்பல், கோட்டபாடி, ஏர்வாடி, கிடாமங்கலம், இடையத்தங்குடி, சேஷமூலை, அருன்மொழித்தேவன், ஆலத்தூர், தென்பீடாகை, பண்டாரவாடை, குருவாடி, போலகம், பொரக்குடி, திருப்புகளுர், கயத்தூர், மாதிரிமங்கலம், புத்தகரம், ஆதலையூர், ஏனங்குடி, புதுக்கடை, திருமருகல், சீயாத்தமங்கை, கட்டுமாவடி, கொத்தமங்கலம், அகர கொந்தகை, எரவாஞ்சேரி, சேகல், திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், கோட்டூர், வடகரை, ராராந்திமங்கலம், தென்கரை, விற்குடி, பில்லாளி, மேலபூதனூர், கீழப்பூதனூர், மருங்கூர், கோபுராஜபுரம், பனங்குடி, உத்தமசோழபுரம், நரிமணம், குத்தாலம், துறையூர், நெய்க்குப்பை, பெரியகண்னமங்கலம், கொட்டாரக்குடி, கீழதஞ்சாவூர், திருப்பயத்தாங்குடி, காரையூர், வாழ்குடி, கங்களாஞ்சேரி, பெருங்கண்டம்பனூர், வடகுடி, நாகூர் (கோட்டகம்) தெத்தி, பாலையூர், இளம்கடம்பனூர், தேமங்கலம், சிரங்குடிபுலியூர், செங்கமங்கலம், செல்லூர், ஜ்வநல்லூர், அந்தணப்பேட்டை, பொரவச்சேரி, சிக்கல் மற்றும் பொன்வெளி கிராமங்கள்,
திட்டச்சேரி (பேரூராட்சி) மற்றும் நாகப்பட்டினம் (நகராட்சி). [3].
வெற்றி பெற்றவர்கள் தொகு
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | ஆர். உமாநாத் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 31,519 | 39% | அம்பலவாணன் | திமுக | 30,809 | 38% |
1980 | ஆர். உமாநாத் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 44,105 | 51% | ராமநாத தேவன் | இதேகா | 41,738 | 48% |
1984 | கோ. வீரையன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 43,684 | 47% | எஸ். தென்கோவன் | அதிமுக | 38,698 | 41% |
1989 | கோ. வீரையன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 44,681 | 44% | பொன் பழனிவேலு | இதேகா | 30,884 | 30% |
1991 | கோடிமாரி | அதிமுக | 53,050 | 51% | வீரையன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 43,116 | 41% |
1996 | ஜி.நிஜாமுதீன் | ,இ.தே.லீக்திமுக | 46,533 | 41% | ஜீவானந்தம் | அதிமுக | 26,805 | 24% |
2001 | ஜீவானந்தம் | அதிமுக | 59,808 | 54% | தங்கையா | திமுக | 43,091 | 39% |
2006 | கோ. மாரிமுத்து | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 57,315 | 46% | ஜெயபால் | அதிமுக | 54,971 | 44% |
2011 | கே. ஏ. ஜெயபால் | அதிமுக | 61,870 | 51.26% | முகமது சேக் தாவூத் | திமுக | 56,127 | 46.51% |
2016 | எம். தமீமுன் அன்சாரி | ம.ஜ.க | 64,903 | 48.64% | முஹமது ஜவாஹிருல்லா | மமக | 44,353 | 33.24% |
2021 | ஆளூர் ஷா நவாஸ் | வி.சி.க[4] | 66,281 | 46.17% | தங்க கதிரவன் | அதிமுக | 59,043 | 41.13% |
2016 சட்டமன்றத் தேர்தல் தொகு
வாக்காளர் எண்ணிக்கை தொகு
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி [5],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
89,661 | 93,386 | 1 | 1,83,048 |
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள் தொகு
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | 73.44% | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
1,34,439 | % | % | % | 73.44% |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
996 | 0.74%[6] |
முடிவுகள் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "Form 21E (Return of Election)". https://www.elections.tn.gov.in/Form21E_TNLA2021/AC163.pdf.
- ↑ நாகப்பட்டினம் தொகுதி கண்ணோட்டம்- 2021 சட்டமன்றத் தேர்தல்
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. பார்த்த நாள்: 4 பிப்ரவரி 2016.
- ↑ நாகப்பட்டினம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ http://www.elections.tn.gov.in/Reports/AC%20wise%20Final%20electoral%20count-29April2016.xlsx.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://eciresults.nic.in/ConstituencywiseS22163.htm?ac=163.