நாகா மக்கள், இந்தியா

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

நாகா மக்கள் (Naga people) (pronounced [naːgaː]), இந்தியாவின் வடகிழக்கிலும், மியான்மர் நாட்டு வடமேற்கு எல்லைப்புறத்திலும் பல்லாண்டுகளாக வாழும் இந்தோ-மங்கலாய்டு இன மலைவாழ் பழங்குடி மக்கள் ஆவர். இந்திய மாநிலங்களான நாகாலாந்தில் பெரும்பான்மையாகவும்; மணிப்பூர், மேகாலயா மற்றும் அசாமில் மற்றும் இந்தியாவின் எல்லைபுற பர்மாவின் அரக்கான் மலைத்தொடர்களில் சிறுபான்மையினராகவும் வாழும் நான்கு மில்லியன் நாகா மக்கள் பல்வேறு மொழிகள் பேசினாலும் ஒரே கலாச்சாரம், பண்பாடு, நாகரீகங்கள் கொண்டுள்ளனர். நாகா மக்கள் சுமி மொழி, லோத்தா மொழி, சாங்தம் மொழி, அங்காமி மொழி, போச்சூரி மொழி, அவோ மொழி, மாவோ மொழி, பௌமாய் மொழி, தங்குல் மொழி, தங்கல் மொழி போன்ற பரிமிய-திபெத் மொழிகள் பேசுகின்றனர். இதனுடன் தங்கள் நெருங்கிய குழுக்கிடையே பேசுவதற்கு இந்தோ-ஆரிய மொழியான நாகாமிய கிரியோல் மொழியை, ஆங்கில மொழியின் எழுத்தில் எழுதிப் படித்துப் பேசுகின்றனர்.[1] இந்திய அரசு நாக இன மக்களின் சமூக, கல்வி, அரசியல் முன்னேற்றத்திற்காக, நாகா மலைவாழ் பழங்குடி மக்களை பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளது.

நாகா மக்கள்
கோன்யாக் நாகா இனத் தலைவர்
மொத்த மக்கள்தொகை
4 மில்லியன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மொழி(கள்)
நாகா பழங்குடி மொழிகள், நாகாமிய கிரியோல் மொழி, ஆங்கிலம்
சமயங்கள்
கிறித்தவம் 95.00 % மற்றும் ஆவியுலகக்கோட்பாடு 5.00 %

2012 இல் நாகா இன மக்கள் பேசும் 17 நாகா இன மொழிகளுக்கு நாகாலாந்து மாநில அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. நாகா இனப் பழங்குடி மக்களிடம் எதிரிகளின் தலையைச் சீவி நரபலி இடும் முறை 1969 ஆம் ஆண்டு முடிய இருந்தது.[2]

மொழிகள் தொகு

 
மியான்மார் நாட்டின் சுமி நாகா இன பெண்களின் புத்தாண்டு நடனம், 2007

வேறு இந்திய மாநிலங்களை விட நாகாலாந்து மாநில, நாகா இன மக்கள் 89 வகையான மொழிகள் பேசுகின்றனர். இம்மொழிகள் மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு இன மொழிகள் என மூன்றாக வகைப் படுத்தப்பட்டுள்ளது.

மேற்கு பகுதியில் அங்காமி, சோக்கிரி, கேசா மற்றும் ரெங்கமா, மத்தியப் பகுதியில் ஆவோ, லோத்தா; கிழக்குப் பகுதியில் கோன்யாக், போம், சங்கதம், கியாம்னியுங்கன், யும்சுங்கர் மற்றும் சாங் நாகா இனக் குழுவினரும் அடங்குவர். சுமி நாகா இன மக்கள் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் வாழ்கின்றனர்.

இதனூடாக நாகா-போடா இன மக்கள் மிக்கிர் மொழியும், குகி மக்கள் லுப்பா மொழியும் பேசுகின்றனர். இவைகள் பர்மிய-திபெத் மொழிகளாகும்.

1967 ஆம் ஆண்டில் நாகாலாந்து சட்டமன்றம் ஆங்கில மொழியை, நாகாலாந்து அரசின் அலுவல் மொழியாகவும்; கல்விக்கூடங்களில் பயிற்று மொழியாகவும் அறிவித்தது. நாகா மக்கள் நாகாமிய கிரியோல் மொழியுடன், ஆங்கிலத்தையும் நன்கறிவர்.

பண்பாடும் அமைப்புகளும் தொகு

 
நாகா போர் வீரன், ஆண்டு 1960

நாகா மக்கள் மொழிகளிளால் பிரிந்தாலும், பண்பாடு மற்றும் நாகரீகத்தால் ஒன்றாக உள்ளனர். நாகா மக்கள் போர்க் குணம் படைத்தவர்கள்.

நாகா மக்களின் ஹார்ன்பில் நடனம் மற்றும் இசை புகழ் பெற்றது.

பெரும்பாலான நாகா மக்கள் உடை, உணவு, பழக்கவழக்கங்கள், மரபுவழிச் சட்டங்கள் முதலியவற்றில் ஒரே உணர்வுடன் உள்ளனர். தொன்மையான வழக்கங்களில் எதிரிகளை நரபலி இடும் முறையை நாகா மக்கள் 1969 ஆம் ஆண்டு முதல் கடைபிடிப்பதில்லை.

வரலாறு தொகு

பிற இனத்தவரை தாக்குதல் தொகு

 
நாகா இன மக்களின் புகைப்படம், ஆண்டு 1870

அசாம் மாநில எல்லையில் வாழும் குகி பழங்குடியினருடன் நாகா மக்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர்.

அசாம் மாநில அகோம் மக்கள் தவிர பிற இனக் குழுவினருடன் நாகா மக்கள் பழகுவதில்லை. 1826இல் பர்மியப் பேரரசுக்கும் - பிரித்தானிய இந்தியாவுக்கும் ஏற்பட்ட யாந்தபோ உடன்படிக்கையின்படி, அசாம் பகுதி பர்மாவிடமிருந்து இந்தியாவிடன் இணைக்கப்பட்டது.[3] 1830 மற்றும் 1845களில் பிரித்தானியப் படைகள் நாகா மக்கள் வாழும் பகுதிகளை கைப்பற்ற முயன்ற போது, ஆயுதப் போராட்டங்கள் மூண்டது.[4]

1830இல் நாகா அங்காமி இனக் குழுவினரிடமிருந்து, பிரித்தானியப் படையினர் கொரில்லாப் போர் முறையை கற்றுக்கொண்டனர். 1878இல் நாகா மக்கள் வாழும் பகுதி முழுவதையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றி பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்தனர்.[5]

 
நாகா பழங்குடி மனிதர்கள், 1905

கிறித்தவ அமைப்புகள் தொகு

19ஆம் நூற்றாண்டில், கி பி 1839இல் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து நாகாலாந்திற்கு வந்த சீர்திருத்தத் திருச்சபை கிறித்தவ அமைப்புகள், பெரும்பாலான நாகா மக்களை கிறித்தவத்திற்கு மத மாற்றம் செய்தனர். இதனால் நாகா மக்களிடையே பண்டைய பழக்க வழக்கங்கள் ஒழிந்து ஆங்கிலம் நன்கு பரவியதால், கல்வி வளர்ந்தது.[6]

95% நாகா மக்கள் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர். கிறித்தவமும், திருச்சபைகளும் நாகா மக்களின் சமூக, அரசியல், கல்வி அமைப்புகளில் முக்கிய இடத்தை வகிக்கிறது.[7] 2012இல் நாக இன மக்கள் பேசும் 17 நாகா இன மொழிகளுக்கு நாகாலாந்து மாநில அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. நாகா இனப் பழங்குடி மக்கள் எதிரிகளின் தலையை சீவி நரபலி இடும் முறை 1969ஆம் ஆண்டு முடிய இருந்தது. தற்போது இவ்வழக்கம் நடைமுறையில் மறைந்துவிட்டது.

எதிர்ப்புகளும் போராட்டங்களும் தொகு

நாகா மக்களுக்கும் நாடு, அரசு, அமைச்சர், ஆளுநர் போன்ற விடயங்கள் தெரியாத காரணத்தால், தாங்கள் வாழும் பகுதிகள் தங்களதே என்ற கொள்கை உடைய நாக மக்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொள்ள விரும்புவதால், தங்கள் இனத்தவர் தவிர பிறரை தாங்கள் வாழும் பகுதிகளில் அனுமதிப்பதில்லை. மீறி வந்தவர்களை தாக்கி எதிர்ப்பர்.

1918இல் ஆங்கிலக் கல்வி பெற்ற சில நாகா மக்கள் ஒன்று சேர்ந்து சங்கம் அமைத்து, இந்திய சீர்திருத்த திட்டத்தில், தங்களை இணைக்கக்கூடாது என சைமன் குழுவிற்கு கடிதம் அனுப்பினர்.[8]

அங்காமி சாபு பிசோ என்பவரின் தலைமையிலான நாகா தேசிய கவுன்சில் (Naga National Council) 14 ஆகஸ்டு 1947 அன்று இந்தியா விடுதலை நாளுக்கு ஒரு நாள் முன்னர், 13 ஆகஸ்டு 1947 அன்று நாகா மக்கள் தங்களின் பகுதியை தனி நாடாக அறிவித்து புதிய நாகாலாந்து நாட்டை அறிமுகப்படுத்தினர். நாகா நாடு வேறு எந்த நாட்டவருக்கும் உரிமையில்லை என்று இனப்போராட்டம் அறிவித்தனர்.

சூன் 1947 இல் இந்திய அரசுக்கும் நாகா தேசிய கவுன்சிலுக்கும் இடையே ஒத்துக் கொள்ளப்பட்ட ஒன்பது அம்ச ஒப்பந்தம், அடுத்த பத்து ஆண்டுகள் வரை, இந்தியாவின் இறையாண்மைக்குட்பட்டு, தங்கள் பகுதிகளில் நாகா மக்கள் அரசு அமைத்து செயல்படலாம் எனக்கூறியது. இதைப் பல நாகா குழுவினர்கள் எதிர்த்தனர்.[9]

1951 இல் நாகா தேசிய கவுன்சில் தலைவர் பிசோவின் நாகா மக்களில் 99% விழுக்காடு கொண்ட நாகாலாந்து பகுதியைத் தனி நாடாகப் பிரித்து தர வேண்டும் என்ற கோரிக்கையை, இந்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் 1952ஆம் ஆண்டு முதல் நாகலாந்து மாநில நாகா மக்கள், இந்தியப் படைகளுடனும், பிற இன மக்களுடனும் கொரில்லா முறையில் ஆயுதப் போர் தொடுத்தனர்.

நாகா தேசிய கவுன்சில் தலைவர் பிசோ கிழக்கு பாகிஸ்தானுக்கு தப்பி ஓடி, பின்னர் லண்டனில் தஞ்சம் புகுந்து, 1990இல் இறக்கும் வரை வெளிநாட்டிலிருந்து நாகா மக்களின் விடுதலைக்காகப் போராடினார்.[10]

போர் நிறுத்த ஒப்பந்தம் தொகு

1 ஆகஸ்டு, 1997 முதல் பிரதமர் ஐ. கே. குஜரால் முயற்சியால் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தப்படி [11] இந்திய இராணுவத்திற்கும், நாகா கொரில்லாப் படையினருக்கும் போர் நிறுத்தம் ஏற்பட்டது.[12]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

 1. Nagamese Creole (Nagamiz)
 2. Michael Fredholm (1993). Burma: ethnicity and insurgency. Praeger. p. 182. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-275-94370-7.
 3. Tezenlo Thong, "A Clash of Worldviews: The Impact of Modern Western Notion of Progress on Naga Culture, 1832-1947," Journal of Race, Religion and Ethnicity, No. 2, 5 (2011): 1-37
 4. Upadhyay, R. Naga Insurgency – A confusion of war or peace (Paper No. 1256, 17 February 2005, South Asia Analysis)
 5. Consolidation of British Powers in the Naga Hills, Mamguis blog, Retrieved on 16 June 2009
 6. Ao. Nagaland Baptist Church Council Celebrates Platinum Jubilee 1937–2012, A Concise History of Christian Missions in North East India-N. Toshi Ao 2012.
 7. Thong, Tezenlo (December 2010). "'Thy Kingdom Come': The Impact of Colonization and Proselytization on Religion among the Nagas". Journal of Asian and African Studies 45 (6): 595–609. doi:10.1177/0021909610373915. http://jas.sagepub.com/content/45/6/595.full.pdf. பார்த்த நாள்: 1 May 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
 8. Prongo, K. "Dawning Of Truth To Crown Indo-Naga Talks", ManipurOnline, 22 September 2002
 9. Ramunny, Murkot. "The 'ceasefire with the Nagas'", The Hindu, 4 July 2001
 10. Mujtaba, Syed Ali. "Nagaland peace talks still elusive" பரணிடப்பட்டது 2009-10-03 at the வந்தவழி இயந்திரம், Global Politician, Retrieved on 18 June 2009
 11. UNPO.org. Nagalim. Retrieved on 25 September 2009
 12. Longkumer, Along. "Ceasefire Flaw or End Game?" பரணிடப்பட்டது 2009-12-27 at the வந்தவழி இயந்திரம், Morunge Express, Retrieved 19 Dec 2009

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Naga people
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகா_மக்கள்,_இந்தியா&oldid=3766868" இலிருந்து மீள்விக்கப்பட்டது