நான்கு உலைகள்

நான்கு உலைகள் (Four Furnaces) என்பது சீனாவின் மிகவும் அதிக வெப்ப நிலையும் அபரிமிதமான ஈரத்தன்மையும் கொண்ட இடங்களைக் குறிக்கும் பதங்கள் ஆகும். கோடை காலத்தில் யாங்ஜி நதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் இருக்கும் பல நகரங்கள் வெப்பம் அதிகம் கொண்டவையாக இருக்கும். சீனா குடியரசான சமயம், கீழ்கண்ட நகரங்கள் நான்கு உலைகள் என்று குறிக்கப்பட்டன:

  • சொங்சிங் நகரம்
  • ஊஹான், ஹ_பெய் மாநிலம்
  • நான்ஜிங், ஜாங்சு மாநிலம்
  • நான்சாங், ஜாங்சி மாநிலம்

இந்நகரங்களுடன் தற்போது சங் ஷா, ஹாங்சாவ் மற்றும் ஷான்ஹாய் சேர்ந்து ஏழு உலைகள் என்றும் கூட குறிப்பிடப்படுகின்றன.

இந்நகரங்கள் நாட்டின் மிகவும் அதிக வெயில் அடிக்கும் இடங்கள் என்று சொல்ல முடியாது. பொதுவாக மக்களால் அப்படி குறிப்படுகின்றன. இவற்றை விடவும் அதிக வெப்பமான இடங்களும் சீனாவில் இருக்கின்றன.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்கு_உலைகள்&oldid=1447147" இலிருந்து மீள்விக்கப்பட்டது