நிக்கார்
நிக்கார் (ஆங்கிலம்: Nikkor) என்பது நிக்கன் நிறுவனத்தால் நிக்கன் புகைப்படக் கருவிகளுக்கான வில்லைகளுக்கான வணிகப் பெயர் ஆகும். நிக்கார் என்பது 1932 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நிக்கோ(Nikkō) எனும் ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு சூரிய ஒளி என்று பொருள். 1933 ஆம் வருடம் நிக்கன் நிறுவனம், நிக்கார் எனும் பெயரில் ஏரோ நிக்கார் (Aero-NIKKOR) என்ற வில்லையை வெளியிட்டது. இது உயரமான இடத்திலிருந்து (பறவைப் பார்வை) புகைப்படம் எடுக்க உதவும் வில்லை ஆகும்.
வகை | நிக்கன் நிறுவனத்தின் துணை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | டோக்கியோ, சப்பான் (1932) |
தலைமையகம் | டோக்கியோ, சப்பான் |
தொழில்துறை | புகைப்படக் கருவி வில்லைகள் |
இணையத்தளம் | www.nikkor.com |