நிதின் கட்காரி

இந்திய அரசியல்வாதி

நிதின் கட்காரி (நிதின் கட்காரி, மராத்தி:नितीन गडकरी) About this soundஒலிப்பு ; (பிறப்பு:27 மே 1957) ஒரு இந்திய அரசியல் பிரமுகர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் ஆவார்[1]. 2009 பொதுத்தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்காரி பிஜேபியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், இவர் மகாராஷ்டிராவின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது செய்த பல புதிய கட்டுமானப் பணிகளுக்காகவும், குறிப்பாக நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் கட்டுமானத்திற்காக அறியப்படுகிறார்[2] தற்போது நடுவண் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக 2014 முதல் உள்ளார்.

நிதின் கட்காரி
முன்னாள் தலைவர் பாரதிய ஜனதா கட்சி
பதவியில்
1 ஜனவரி 2010 – 22 ஜனவரி 2013
முன்னவர் ராஜ்நாத் சிங்
பின்வந்தவர் ராஜ்நாத் சிங்
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்
பதவியில்
27 மே 1995 – 1999
தனிநபர் தகவல்
பிறப்பு மே 27, 1957 (1957-05-27) (அகவை 66)
நாக்பூர், இந்தியா
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) காஞ்சன் கட்காரி
பிள்ளைகள் நிகில், சாரங் மற்றும் கேட்கி
படித்த கல்வி நிறுவனங்கள் நாக்பூர் பல்கலைக்கழகம்
பணி வழக்கறிஞர், தொழிலதிபர்
சமயம் இந்து
இணையம் nitingadkari.in

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதின்_கட்காரி&oldid=3635971" இருந்து மீள்விக்கப்பட்டது