நிதியறை கருவூலம் என்றும் அழைக்கப்படுகிறது. பண்டைக்காலங்களில் அரசர்கள் தங்கள் செல்வங்களை நிதியறைகளில் சேமித்து வைத்தனர். அன்னியர்கள் படையெடுத்து வரும் போது இந்த நிதியறைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள செல்வங்களைக் கொள்ளையடித்துச் செல்வர். ஆகவே இந்த நிதியறைகள் மிகுந்த கவனத்துடன் பாதுகாப்புடன் வலிமையானதாக அமைக்கப்பட்டு இருக்கும். நிதியறைகளின் அமைப்பு பற்றி கௌடில்யம் என்ற நூல் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.

நிலவறை அமைப்பு தொகு

1. நிதியறைகள் சதுர வடிவில் அமைந்திருக்க வேண்டும். 2.அதன் நாற்புறமும் நீர்க்கசிவில்லாதபடி பள்ளம் தோண்டி இருக்க வேண்டும். 3. அதன் நாற்புறமும் அடிப்பரப்பும் பெரிய கற்களையும்,பருத்து வயிரம் ஏறிய மரங்களாகிய பஞ்சரத்தையும் [1] 4.நிலமட்டத்தோடு ஒத்த மூன்று தளங்களையும் பலவகை உள்ளறைகளையும் கொண்டிருக்க வேண்டும்.மூன்று தளங்களில் நீரும், கல்லும் விரவி இறுக்கப்பட்டு மேல், நடு, கீழ் தளங்களாக இருக்க வேண்டும். 5. பொறிகளால் அமைக்கப்பட்ட ஏணிகளையும், தெய்வப்படிவம் அமைந்த கதவினையும் உடையதாக நிலவறை அமைதல் வேண்டும்.

மேற்கோள்கள்

  1. கௌடில்யம் , 1ம் அதிகரணம் 4ம் பிரகரணம் அரணுள் அமைத்தல் அத்தியாயம் 25
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதியறை&oldid=2400095" இலிருந்து மீள்விக்கப்பட்டது