நினா தவுலுரி
நினா தவுலுரி மிஸ் நியூயார்க் 2013 அழகி, அட்லான்டிக் சிட்டியில் நடந்த போட்டியில் மிஸ் அமெரிக்கா 2014 பட்டத்தை வென்ற முதல் இந்திய வம்சவாளி அழகி ஆவார். நடுவர்களால் இவரிடம் இறுதிச்சுற்றில் கேட்கப்பட்ட கேள்வி பிளாஸ்டிக் முகமாற்று அறுவைச் சிகிச்சை பற்றியது. உங்கள் இமை மற்றும் கண்கள் கூடுதலாக நீங்கள் ஒரு ஆசியர் போன்று காட்டிக் கொடுக்கிறதே, அதை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றச் சொன்னால் என்ன செய்வீர்கள் என நடுவர்கள் கேள்வி எழுப்ப, நீங்கள் எப்படி இயல்பாக இருக்கிறீர்களோ அதில் நம்பிக்கை வையுங்கள் என்றார் நீனா.[1]
நினா தவுலுரி | |
---|---|
பிறப்பு | சைரக்யூஸ், நியூயார்க் |
கல்வி | மிச்சிகன் பல்கலைக்கழகம் |
அழகுப் போட்டி வாகையாளர் | |
பட்டம் | மிஸ் சைரக்யூசு2013 மிஸ் நியூயார்க் 2013 மிஸ் அமெரிக்கா 2014 |
தலைமுடி வண்ணம் | Brunette |
விழிமணி வண்ணம் | செம்மஞ்சள் |
முக்கிய போட்டி(கள்) | மிஸ் அமெரிக்கா 2014 (வாகையாளர்) |
படிப்பு
தொகுஇவரின் அப்பா அமெரிக்காவில் புகழ்பெற்ற மகப்பேர் மருத்துவராக உள்ளார். அவரைப்போல் இவரும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் (மூளை சார் அறிவியல்) பெற்றுள்ளார். சில ஆண்டுகளாக இந்திய நடனமும் கற்றுவருகிறார்.
சான்றுகள்
தொகு- ↑ "மிஸ் அமெரிக்கா பட்டத்தை முதன்முறையாக வென்ற இந்திய வம்சாவளிப் பெண்!". Archived from the original on 2013-09-18. பார்க்கப்பட்ட நாள் 16 September 2013.