நிர்மலா செல்லப்பன்

இந்திய மருத்துவர்

நிர்மலா செல்லப்பன் (Sellappan Nirmala) 1986 ஆம் ஆண்டு எச்.ஐ.வி நோயை இந்தியாவில் முதன் முதலில் கண்டுபிடித்த மருத்துவராவார். 1985 ஆம் ஆண்டு நிர்மலாவுக்கு 32 வயதாகும்போது சென்னையில் நுண்ணுயிரியல் மாணவியாக பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது தனது ஆய்வுக் கட்டுரைக்காக இரத்த மாதிரிகளை சேகரிக்கத் தொடங்கினார். அவற்றில் எச்.ஐ.வி பாதிப்பு உள்ளதா என பரிசோதனைகள் மேற்கொண்டார். அவற்றில்தான் எச்.ஐ.வி சோதனையின் நேர்மறை முடிவைக் கொடுத்த இரத்த மாதிரியும் இருந்தது.

தொழில்

தொகு

ஒரு பாரம்பரிய இந்திய குடும்பத்தில் பிறந்து வளர்க்கப்பட்ட நிர்மலா அவரது கணவரால் மருத்துவ ஆராய்ச்சிக்கு செல்ல ஊக்குவிக்கப்பட்டார். 1982 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கிய எச்.ஐ.வி வைரசு கண்டுபிடித்தல் இயக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக தனது வழிகாட்டியான பேராசிரியர் சுனிட்டி சாலமன் என்பவரிடமிருந்து எச்.ஐ.வி வைரசை ஆராய்ச்சி செய்யும் ஆர்வம் இவருக்கு இருந்தது. [1] அந்த நேரத்தில் எச்.ஐ.வி தொடர்பானவை நாட்டில் தடைசெய்யப்பட்ட செய்தியாக இருந்தன. [2]

நேர்மறையான முடிவுகள் கிடைக்காத்தால் மும்பை மற்றும் புனேவிலிருந்து இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. நிர்மாலாவால் சேகரிக்கப்பட்ட 80 நபர்களின் இரத்த மாதிரிகள் உட்பட அதிக ஆபத்து இருப்பதாக சந்தேகிக்கப்படும் குழுக்களிடமிருந்து சுமார் 200 இரத்த மாதிரிகளை எடுத்துக்கொள்வது இந்த ஆராய்ச்சித் திட்டத்தில் அடங்கும். சென்னையில் பரிசோதனை வசதிகள் இல்லாததால் இவர்களை 200 கிலோமீட்டர் (120 மைல்) தொலைவில் இருக்கும் வேலூரில் உள்ள கிறித்துவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ள சாலமன் ஏற்பாடு செய்தார். இந்தியாவில் எச்.ஐ.வி பரவி இருப்பதை இந்த இரத்த மாதிரிகள் உறுதிப்படுத்தின. [3] எனவே இந்த தகவல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மாற்றப்பட்டது, இது பிரதமர் இராசீவ் காந்திக்கும் தமிழக சுகாதார அமைச்சர் எச். வி. அண்டேவுக்கும் தெரிவிக்கப்பட்டது. [4] பின்னர்தான் எச்.ஐ.வி நாட்டில் ஒரு தொற்றுநோயாக மாறியது. [2]

தமிழ்நாட்டில் எய்ட்சு கண்காணிப்பு என்ற தனது ஆய்வுக் கட்டுரையை நிர்மலா மார்ச் 1987 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் சமர்ப்பித்தார். சென்னையில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார். 2010 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார். [4][3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மலா_செல்லப்பன்&oldid=3315903" இலிருந்து மீள்விக்கப்பட்டது