நிழல் தாங்கல்

நிழல் தாங்கல், அய்யாவழியின் வழிபாட்டு தலங்களுக்கு அகிலத்திரட்டு அம்மானையில் கொடுக்கப்பட்டுள்ள பெயராகும். இவை பதிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவைகளாகும். அய்யாவழியின் வழிபாட்டு தலங்களுள் அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளுடன் நேரடித் தொடர்பு இல்லாதவைகளெல்லாம் தாங்கல்கள் என்றே அகிலத்தில் குறிப்பிடப்படுகிறது.

இவை பதிகளை விட அளவில் சிறியவை. மேலும், இங்கு எந்த வித சிலைகளும் இருக்காது. ‌இவை மிகத் தூய்மையுடன் பேணப்படுகின்றன.

1996- ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி தென்னிந்திய முழுவதுமாக 7000 தாங்கல்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இவை அதிகமாக காணப்படுகின்றன.


இதில் ,*அமராவதிவிளை நிழல் தாங்கல் மாதம் தோறும் முதல் கிழமை தோறும் அன்னதானமும் வருடத்தில் பத்து நாள் திருவிழாவும் அன்னதானமும் மாதம் கொண்டாட படுகிறது

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிழல்_தாங்கல்&oldid=2965909" இருந்து மீள்விக்கப்பட்டது