நீண்மொழி
நீண்மொழி என்பது புறநானூறு 287-ஆம் பாடலுக்குத் தரப்பட்டுள்ள துறைப்பெயர்.
கரந்தைத்திணையின் துறையாக இது குறிப்பிடப்பட்டுள்ளது. போர் வீரர்களை வானுலக மகளிர் தழுவுவர் என இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.
புறப்பொருள் வெண்பாமாலை கரந்தைத் திணையின் துறைகள் என்று 14 துறைகளைக் குறிப்பிடுகிறது. அதில் நெடுமொழி என வரும் துறை போர்வீரன் தன் பெருமையைத் தானே எடுத்துக் கூறுவதாக அமையும் எனக் குறிப்பிடுகிறது. [1]
கரந்தைத்திணையை வஞ்சித்திணைக்குள் அடக்கிக் காட்டும் தொல்காப்பியத்தில் புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தத் திணை பற்றிய பேச்சு இல்லை.
அடிக்குறிப்பு
தொகு- ↑ புறப்பொருள் வெண்பாமாலை 32