நீரஜ் போரா

இந்திய அரசியல்வாதி

நீரஜ் போரா: (1967 இல் பிறந்தார்) இவா் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். உத்தர பிரதேச மாநில  சட்டப் பேரவை  உறுப்பினராகவும் இருந்தாா்.  இவா்  மறைந்த முன்னாள் உத்திர பிரதேச சட்டமன்ற உறுப்பினா் டி.பி.போராவின் மகன் ஆவாா். இவா் பாரதிய ஜனதா கட்சியை சோ்ந்த உறுப்பினா்.  2017 சட்டமன்ற  தோ்தலில் லக்னோ வடக்கு தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.  இவா் சமாஜ்வாதி கட்சியை சோ்ந்த  பேராசிரியர் அபிஷேக் மிஸ்ராவை தோல்வியுற செய்தாா். நீராஜ் உத்தரப்பிரதேச மாநிலத்தின்சித்தார்த் நகர் மாவட்டத்தின் ஷோராட் கார்கில் தெஹ்சில் நகரில் பிறந்தார்.

டாக்டா்.நீரஜ் போரா
डॉ. नीरज बोरा
உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினர்
முன்னையவர்பேராசிரியர். அபிஷேக் மிஸ்ரா
தொகுதிலக்னோ வடக்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 மாா்ச் 1967
ஷோராட் கார்க்க், உத்தரப் பிரதேசம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்பிந்து போரா (m. 1992)
பிள்ளைகள்
கஞ்ச்ரியா போரா
ஷிவங்கி போரா
வத்சல் போரா
பெற்றோர்
டி. பி. போரா
சுஷிலா போரா
வாழிடம்(s)லக்னோ,உத்தரப் பிரதேசம்

இவா் தனது தந்தையின் செல்வாக்கினால்மிக இளம் வயதில் இருந்து சமூக துறையில் சேவை செய்ய விரும்பினார். லக்னோவின் மிக முக்கியமான பள்ளிகளில் ஒன்றான அவரது பள்ளி படிப்பை முடித்தாா். பின்னா் பெங்களூர், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க சென்றாா்.நீராஜ் பிந்து போராவை மணந்தார்.  இவா்களுக்கு  மூன்று குழந்தைகள்  இருந்தனா். அதில் ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் ஆவாா். கடந்த காலத்தில், அவர் வட இந்தியாவின் சா்வதேச அாிமா சங்க தலைவராகவும் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் லக்னோ கிளை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இவர் உத்திர பிரதேச அனைத்திந்திய வைஷ் சம்மேளனத்தின் மூத்த துணைத் தலைவராகவும்  இருந்துள்ளாா். இவர் சேவா மருத்துவமனையையும், நேசநாடுகளின் உடல் நல அறிவியல் மையத்தையும் நிறுவினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரஜ்_போரா&oldid=2720345" இலிருந்து மீள்விக்கப்பட்டது