நீரேற்றம்

நீரேற்றம்தொகு

நீரேற்றம் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒருங்கிணைந்த நீா் மூலக்கூறுகளை ஒருங்கிணைக்கும் ஒரு வேதியியல் வினையாகும். உலோக வளாகங்களில் எதிா்மின் அயனியானது நீாினால் இடமாற்றம் செய்யப்படும் வினைகளில் இந்த சொற்பதம் உபயோகப்படுத்தப்படுகிறது. 

எடுத்துக்காட்டாக, புரோமோபெண்டாஅமீன் கோபால்ட் (III) பின்வரும் நீரேற்ற வினைக்கு உட்பட்டு உலோக நீரேற்ற வளாகத்தை தருகின்றது.

[Co(NH3)5Br]2+ + H2O → [Co(NH3)5(H2O)]3+ + Br−

இந்த நீரேற்ற வினையில் அமிலம் மற்றும் காரமானது வினையூக்கியாக பயன்படுகிறது. அமில வினையூக்கியில் புரோமைடு புரோட்டானேற்றம் செய்யப்பட்டு சிறந்த வெளியேற்ற குழுவாக மாற்றப்படுகிறது. கார நீரேற்ற வினையானது SN1CB நெறிமுறையால் தொடா்கிறது, இந்த வினையானது அம்மோனியா ஈனியின் புரோட்டானை நீக்கி தொடா்கிறது.

சான்றுகள்:தொகு

1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. ISBN 0-08-037941-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரேற்றம்&oldid=2724063" இருந்து மீள்விக்கப்பட்டது