நீர்ப்பாலூட்டியியல்

விலங்கியல்

தொடரின் ஒரு பகுதி


விலங்கியலின் கிளைகள்

மானிடவியல் ·
தேனீயியல் · எட்டுக்காலியியல்
கணுக்காலியியல் · நீர்ப்பாலூட்டியியல்
சிப்பியோட்டியல் · பூச்சியியல்
நடத்தையியல் · ஒண்டுப்புழுவியல்
ஊர்வனவியல் · மீனியல்
நத்தையினவியல் · பாலூட்டியியல்
எறும்பியல் · உருளைப்புழுவியல்
விலங்கு நரம்பு&நடத்தையியல் · பறவையியல்
தொல்விலங்கியல் · மிதவையுயிரியல்}
முதனியியல்

குறிப்பிடத்தக்க விலங்கியலாளர்

ஜார்ஜஸ் கவியர் · சார்லசு டார்வின்
வில்லியம் கிர்பி · கரோலசு லின்னேயசு
கான்ட்ராட் லாரென்சு · தாமசு சே
ஆல்ஃப்ர்ட் ரஸல் வல்லேஸ் · மேலும்...

வரலாறு

டார்வினுக்கு முன்
டார்வினுக்குப் பின்


நீர்ப்பாலூட்டியியல் என்பது, கடல்வாழ் பாலூட்டிகள் தொடர்பான ஒரு அறிவியல்துறையாகும். திமிங்கிலம், கடற்பசு போன்ற சீட்டாசீ அறிவியல் வகைப்பாட்டு வரிசையைச் சேர்ந்த ஏறத்தாழ எண்பது வகையான உயிரினங்களைப் பற்றி இத்துறை ஆய்வு செய்கின்றது.

நீர்ப்பாலூட்டியியலாளர் அல்லது இத்துறையில் ஈடுபாடு கொண்டோர் இக் கடல்வாழ் பாலூட்டிகளின் படிமலர்ச்சி, பரம்பல், உருவவியல், நடத்தை, சமுதாய இயக்கம், மற்றும் இதுபோன்ற விடயங்களைப் புரிந்துகொள்ள முயல்கின்றனர்.

வரலாறு

தொகு
 
ஒரு ஆய்வாளர், கடல்வாழ் பாலூட்டி ஒன்றின்மீது உடற்திசுப் பரிசோதனை அம்பொன்றை எய்கிறார். இந்த அம்பு, விலங்கில் தோலில் சிறு பகுதியை எடுத்துக்கொண்டு விலங்குக்கு எவ்வித தீங்கும் இழைக்காமல் திரும்பிவிடும்.

செந்நெறிக் காலத்தில் இருந்தே கடல் வாழ் பாலூட்டிகளைக் கவனித்தல் தொடர்பான பதிவுகள் காணப்படுகின்றன. பண்டைக் கிரேக்க மீனவர்கள், தமது வலைகளில் சிக்கிக்கொள்ளும் கடற்பசுக்களின் முதுகுத் துடுப்பில் செயற்கையாகச் சிறு வெட்டொன்றை ஏற்படுத்துவதன் மூலம் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் அதனைத் தனியாக அடையாளம் கண்டுகொள்வர்.

ஏறத்தாழ 2,300 ஆண்டுகளுக்கு முன்னர், அரிசுட்டாட்டில், மீனவர்களுடன் கடலில் பயணம் செய்து இந்த நீர்வாழ் பாலூட்டிகள் தொடர்பான குறிப்புக்களை எடுத்துள்ளார். இவரது விலங்குகளின் வரலாறு என்னும் நூலில், இவர் பாலீன் திமிங்கிலங்களுக்கும், பற்களுள்ள திமிங்கிலங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கவனித்துக் குறித்துள்ளார். இப் பிரிப்பு இன்றைய வகைப்பாட்டியலிலும் பயன்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்ப்பாலூட்டியியல்&oldid=3006462" இலிருந்து மீள்விக்கப்பட்டது