நீர்மநிலை உலோகம்
நீர்மநிலை தனிமங்கள் (liquid elements) அறை வெப்பநிலையிலும் அதனை அடுத்த வெப்பநிலையிலும் நீர்மநிலையில் உள்ள உலோகங்கள் ஆகும். பொதுவாக பெரும்பாலான உலோகங்கள் அறைவெப்பநிலையில் திண்ம நிலையிலேயே காணப்படுகின்றன. விதிவிலக்காக சில தனிமங்கள் அறைவெப்ப நிலையில் நீர்மநிலையில் உள்ளன. அவையாவன,
- 31காலியம்70. சாம்பல் நிறம்-உருகு வெப்பநிலை 303.46K
- 35புரோமின்80.அரிக்கும் நெடி உள்ளது.வெளிர் சிவப்பு.-உ.வெ.நி. 265.9K
- 80பாதரசம்200.59. நச்சுத் தன்மையுடையது.வெள்ளிபோல் பளபளப்பானது. உ.வெ. நி. 234.32K
- 87பிரான்சியம்223.கதிரியக்கமுடைய அதிக செயல்திறனுடையதுஉ.வெ.நி.300K
- 37ருபிடியம்85.5. மென்மையான வெள்ளி போன்றது.உ.வெ.நி. 312.46K
- 55சீசியம்133. நீருடன் விரைந்து செயல்படும். உ.வெ.நி.301.6K
புரோமினும் பாதரசமும் அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ளன. மற்றவை அறை வெப்பநிலையினை அடுத்த வெப்பநிலையில் நீர்மமாக உள்ளன.