குமாரசுவாமி ஐயர் தியாகராஜக்குருக்கள் யாழ்ப்பாணத்து காரைநகரில் 1943 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ல் பிறந்தார். தற்போது யாழ்ப்பாணத்து நீர்வேலியில் வாழ்ந்து வரும் இவர் தனது 16ஆவது வயதிலிருந்து எழுத்துப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதே வேளை ஒரு இந்துக் குருவாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் தியாகராஜக்குருக்கள் நீர்வை மணி என்ற புனை பெயரில் எழுதி வருகிறார். நீர்வேலி செல்லக்கதிர்காம முருகன் ஆலய பிரதமகுருக்களாக இருக்கும் இவர் பல்வேறு சமஸ்கிருத தமிழ் மொழி நூல்களை வெளியிட்டு வருவதுடன் பல்வேறு கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதி வருகிறார்.

இந்த வகையில் தமிழ் எழுத்துத் துறையில் பிரகாசிக்கும் புகழ்பூத்த ஒரு சிவாச்சார்யாராக யாழ்ப்பாணத்தில் இவர் விளங்குகின்றார். கலை, கலாச்சார விடயங்களிலும் அக்கறை கொண்டு செயற்படும் இக்குருக்கள் அவர்களுக்கு நவம்பர் 2011ல் நீர்வேலி கலை பண்பாட்டுப் பேரவையினரால் 'நீர்வைக் குரிசில்' விருது வழங்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்வை_மணி&oldid=986499" இலிருந்து மீள்விக்கப்பட்டது