நீலகிரி மக்களவைத் தொகுதி
நீலகிரி மக்களவைத் தொகுதி (Nilgiris Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 19வது தொகுதி ஆகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.
நீலகிரி மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
![]() நீலகிரி மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1957-நடப்பு |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 12,41,437[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 107. பவானிசாகர் 108. உதகமண்டலம் 109. கூடலூர் (தனி) 110. குன்னூர் 111. மேட்டுப்பாளையம் 112. அவினாசி (தனி) |
தொகுதி மறுசீரமைப்புதொகு
தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு, மேட்டுப்பாளையம், அவினாசி (தனி), தொண்டாமுத்தூர், குன்னூர் (தனி), உதகமண்டலம், கூடலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்கு பின்பு, பொதுத்தொகுதியாக இருந்த நீலகிரி தனி தொகுதியாக மாற்றப்பட்டது.
சட்டமன்ற தொகுதிகள்தொகு
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
வென்றவர்கள்தொகு
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | கூட்டணி | ஆதாரம் |
---|---|---|---|---|
2 ஆவது மக்களவைத் தேர்தல், 1957 | சி.நஞ்சப்பா | காங்கிரசு | ||
3 ஆவது மக்களவைத் தேர்தல், 1962 | அக்கம்மா தேவி | காங்கிரசு | ||
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 | மு. க. நஞ்சே கவுடர் | சுதந்திராக் கட்சி | ||
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971 | ஜெ. மாதே கவுடர் | திமுக | ||
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 | ராமலிங்கம் | அதிமுக | ||
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 | இரா. பிரபு | காங்கிரசு | ||
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 | இரா. பிரபு | காங்கிரசு | ||
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 | இரா. பிரபு | காங்கிரசு | ||
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 | இரா. பிரபு | காங்கிரசு | ||
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 | எஸ். ஆர். பாலசுப்ரமணியன் | காங்கிரசு | ||
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 | மாஸ்டர் மதன் | பாஜக | ||
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 | மாஸ்டர் மதன் | பாஜக | ||
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 | இரா. பிரபு | காங்கிரசு | ||
2009 முதல், இத்தொகுதி பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக, ஒதுக்கப்பட்டது | ||||
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | ஆ. இராசா | திமுக | ||
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | கோபாலகிருஷ்ணன் | அதிமுக | ||
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | ஆ. இராசா | திமுக |
வாக்காளர்கள் எண்ணிக்கைதொகு
தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 6,15,957 | 6,25,453 | 27 | 12,41,437 | ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
வாக்குப்பதிவு சதவீதம்தொகு
தேர்தல் | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு | ஆதாரம் |
---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | 70.79% | - | [3] |
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 73.43% | ↑ 2.64% | [1] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)தொகு
முக்கிய வேட்பாளர்கள்தொகு
இரா. பிரபு (காங்கிரசு) - 4,94,121.
மாஸ்டர் மதன் (பாஜக) - 2,57,619.
வாக்குகள் வித்தியாசம் - 2,36,502
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)தொகு
14 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின் ஆ. இராசா, மதிமுகவின் சி. கிருட்டிணனை 86,021 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
முக்கிய வேட்பாளர்கள்தொகு
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
ஆ. இராசா | திமுக | 3,16,802 |
சி. கிருட்டிணன் | மதிமுக | 2,30,781 |
எசு. செல்வராசு | தேமுதிக | 76,613 |
எசு. பதிரன் | கொமுபே | 32,776 |
எசு. குருமூர்த்தி | பாசக | 18,690 |
சி. வேல்முருகன் | சுயேச்சை | 11,979 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)தொகு
முக்கிய வேட்பாளர்கள்தொகு
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
கோபாலகிருஷ்ணன் | அதிமுக | 4,63,700 |
ஆ. இராசா | திமுக | 3,58,760 |
பி. காந்தி | காங் | 37,702 |
17வது மக்களவைத் தேர்தல் (2019)தொகு
வாக்காளர் புள்ளி விவரம்தொகு
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
10,10,719[4] |
முக்கிய வேட்பாளர்கள்தொகு
இத்தேர்தலில், 4 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 6 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஆ. ராசா, அதிமுக வேட்பாளரான, தியாகராஜனை 2,05,823 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் |
---|---|---|---|---|
ஆ. ராசா | திமுக | 5,47,832 | 54.20% | |
தியாகராஜன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 3,42,009 | 33.84% | |
இராஜேந்திரன் | மக்கள் நீதி மய்யம் | 41,169 | 4.07% | |
எம். இராமசாமி | அமமுக | 40,419 | 4.00% | |
நோட்டா | - | - | 18,149 | 1.8% |
மேற்கோள்கள்தொகு
- ↑ 1.0 1.1 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. 29 செப்டம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. 2014-03-30 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். ஏப்ரல் 30, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. 22 ஜூன் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 August 2019 அன்று பார்க்கப்பட்டது.
உசாத்துணைதொகு
- தட்ஸ்தமிழ் 2009 தேர்தல் செய்திகள் பரணிடப்பட்டது 2010-12-07 at the வந்தவழி இயந்திரம்