நீலமணி ரௌத்ரே

நீலமணி ரௌத்ரே (ஆங்கிலம்: Nilamani Routray; ஒடியா: ନୀଳମଣି ରାଉତରାୟ)(24 மே 1920 - 4 அக்டோபர் 2004) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் 1977 முதல் 1980 வரை ஒடிசாவின் முதலமைச்சராக இருந்தவர் ஆவார். இவர் வி. பி. சிங் தலைமையிலான மத்திய அரசில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகவும், பின்னர் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பணியாற்றினார். இவர் 4 அக்டோபர் 2004 அன்று இறந்தார்.[3][4]

நீலமணி ரௌத்ரே
ନୀଳମଣି ରାଉତରାୟ
சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம்
பதவியில்
2 திசம்பர் 1989 – 10 நவம்பர் 1990
பிரதமர்வி. பி. சிங்
முன்னையவர்வி. பி. சிங்
பின்னவர்மேனகா காந்தி
10ஆவது ஒடிசா முதலமைச்சர்
பதவியில்
26 சூன் 1977 – 17 பிப்ரவரி 1980[1]
ஆளுநர்அரிசரண் சிங் பிரார்
பா. த. சர்மா
முன்னையவர்பினாயக் ஆச்சார்யா
பின்னவர்ஜானகி பால்லாப் பட்நாயக்
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை[2]
பதவியில்
1989–1991
முன்னையவர்பிராஜ்மோகன் மொகாந்தி
பின்னவர்பிராஜ கிஷோர் திரிபாதி
தொகுதிபுரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1920-05-24)24 மே 1920
முகுந்தபுர், பாலேசுவர் மாவட்டம், பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு4 அக்டோபர் 2004(2004-10-04) (அகவை 84)
கட்டாக், ஒடிசா, இந்தியா
அரசியல் கட்சிஜனதா தளம்
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு,
உத்கல் காங்கிரசு,
பாரதிய லோக் தளம்,
ஜனதா கட்சி
துணைவர்நளினி தேவி
பிள்ளைகள்பைஜேஸ்ரீ ரெளத்ரே
பெற்றோர்
  • சந்திர சேகர் ரெளத்ரே (father)
கல்விஇளங்கலை, இளங்கலை சட்டம்
முன்னாள் கல்லூரிஇரவீன்சா கல்லூரி,
வித்யாசாகர் கல்லூரி,
பனாரசு இந்து பல்கலைக்கழகம்
வேலைஅரசியல், சமூகசேவை, ஊடகவியலாளர், வழக்கறிஞர்
விருதுகள்ஒடிசா சாகித்திய அகாதமி விருது 1986

அரசியல் வாழ்க்கை தொகு

அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் ஒடிசா பிரிவை நிறுவியவர் நீலமணி ரௌத்ரே ஆவார். இவர் 1967 முதல் 1970 வரை இந்திய தேசிய காங்கிரசின் ஒடிசா மாநிலத் தலைவராக இருந்தார். பின்னர் இவர் உத்கல் காங்கிரஸில் சேர்ந்து அதன் தலைவரானார். இதன்பிறகு பாரதிய லோக் தளத்திற்கு மாறி, மாநிலப் பிரிவின் தலைவராக ஆனார். இவர் 1989-ல் இந்திய நாடாளுமன்ற புரி மக்களவை தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

விருது தொகு

ரௌத்ரே சுயசரிதையான ஸ்ம்ருதி ஓ அனுபூதி (1986) 1988-ல் ஒடிசா சாகித்திய அகாதமி விருதினை வென்றது.[6][7]

மேற்கோள்கள் தொகு

  1. "Brief History of Odisha Legislative Assembly Since 1937". ws.ori.nic.in. 2011. Archived from the original on 9 சனவரி 2007. பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்பிரல் 2012. NAME OF THE CHIEF MINISTERS OF Odisha
  2. "Members Bioprofile". Parliament of India, Lok Sabha. 1920-05-24. பார்க்கப்பட்ட நாள் 2019-07-08.
  3. "Nilamani Routray dead". தி இந்து. 5 October 2004. Archived from the original on 10 October 2004.
  4. Nilamani Routray passes away, three-day state mourning in Odisha
  5. "Former Odisha Chief Minister Nilamani Routray passes away". Daily Excelsior. 5 October 2004.
  6. "Odisha Sahitya Academy Award winners" (PDF). 2019-07-08. Archived from the original (PDF) on 8 July 2019. பார்க்கப்பட்ட நாள் 8 July 2019.
  7. "Odisha Sahitya Akademi". Odisha Sahitya Akademi (in ஒடியா). Archived from the original on 13 June 2016. பார்க்கப்பட்ட நாள் 2019-07-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலமணி_ரௌத்ரே&oldid=3741761" இலிருந்து மீள்விக்கப்பட்டது