நீலிகா மாளவிகே

இலங்கை பத்திரிகையாளர்

காத்சவுரி நீலிகா மாளவிகே (Gathsaurie Neelika Malavige) இலங்கையைச் சேர்ந்த ஒரு கல்வியாளர் ஆவார். பல்கலைக்கழக பேராசிரியர், ஆராய்ச்சியாளர் மற்றும் விஞ்ஞானி என்ற பன்முகங்களுடன் இவர் செயல்பட்ட்டார். தற்போது 2020 ஆம் ஆண்டு முதல் மருத்துவ அறிவியல் பீடமான சிறீ செயவர்தனபுரா பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையின் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். [1] 2008 ஆம் ஆண்டு முதல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் வருகை தரும் விரிவுரையாளராகவும் நீலிகா பணியாற்றுகிறார். இலங்கையின் முதல் பாலியல் நிபுணராகக் கருதப்படும் இலசந்த மாளவிகேவை நீலிகா மணந்தார். [2]

நீலிகா மாளவிகே
Neelika Malavige
தேசியம்இலங்கை
படித்த கல்வி நிறுவனங்கள்கொழும்புப் பல்கலைக்கழகம்
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
பணிபேராசிரியர், ஆராய்ச்சியாளர் மற்றும் விஞ்ஞானி
வாழ்க்கைத்
துணை
இலசாந்தா மாளவிகே
விருதுகள்மூன்றாவது உலக அறிவியல் அகாதமி (2012)
சோந்தா விருது (2014)

தொழில்

தொகு

நீலிகா 2000 ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் இளநிலை பட்டம் பெற்றார். முனைவர் பட்டப் படிப்புக்காக இங்கிலாந்து சென்ற நீலிகா அங்கு மூலக்கூறு மருத்துவ எம்.ஆர்.சி வெதரல் மூலக்கூற்று மருத்துவ நிறுவனத்தில் படித்தார். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இக்கல்லூரியில்தான் இவர் 2008 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.[3] 2004 ஆம் ஆண்டில் பொதுநலவாய உதவித்தொகை திட்டத்தின் மூலம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவப் படிப்பை நீலிகா தொடர்ந்தார். இங்கிலாந்தில் தனது உயர் படிப்பை முடித்த பிறகு, இவர் இலங்கைக்குத் திரும்பினார். 2008 ஆம் ஆண்டு முதல் வருகை தரும் விரிவுரையாளராக தனது கல்விப் பணியைத் தொடர்ந்தார். [4]

ஐக்கிய இராச்சியத்தின் இராயல் மருத்துவக் கல்லூரிகளின் உறுப்பினர் பதவியை 2005 ஆம் ஆண்டு நீலிகா பெற்றார். ஐக்கிய இராச்சியத்தின் இராயல் கல்லூரிகளின் மருத்துவக் கல்லூரிகளின் சக உறுப்பினராகவும் நீலிகா தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தின் நோயியல் நிபுணர்களின் இராயல் கல்லூரிகளின் சக உறுப்பினராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [5]

2012 ஆம் ஆண்டு முதல் சிறீ செயவர்தனபுரா பல்கலைக்கழகத்தின் டெங்கு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகவும் நீலிகா பணியாற்றுகிறார். [6] 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை நுண்ணுயிரியல் துறையில் மூத்த விரிவுரையாளராக பணியாற்றினார். 2012 முதல் 2015 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டு நுண்ணுயிரியல் துறையின் தலைவராகவும் பணியாற்றினார். 2013 முதல் 2020 ஆம் ஆண்டு வரை நுண்ணுயிரியல் துறையில் பேராசிரியராகவும் பணியாற்றினார். [4]

பிரித்தானிய நோயெதிர்ப்பியல் சங்கத்தின் உறுப்பினராக இருந்த நீலிகா இலங்கை மருத்துவக் கல்லூரி, இலங்கை மருத்துவ சங்கம், ஐரோப்பிய ஒவ்வாமையியல் அகாதமி மற்றும் மருத்துவ நோயெதிர்ப்பியல், பன்னாட்டு தொற்று நோய் சங்கம், அமெரிக்க வெப்பமண்டல மற்றும் நலவியல் போன்ற பல முக்கிய மருத்துவம சார்ந்த அமைப்புகளில் இவர் உறுப்பினராக உள்ளார். [4] ஆக்சுபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவில் கோவிட் -19 உடல் எதிர்ப்பு சோதனைகளை நடத்தும் முக்கிய உறுப்பினராகவும் உள்ளார். [7] [8] 2020 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தொற்று நோய்களுக்கான சர்வதேச சங்கத்தின் நிர்வாகக் குழுவில் நீலிகா சேர்ந்தார். நிர்வாகக் குழுவில் சேருவதற்கு முன்பு, இவர் 2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரை தொழில்துறை வளர்ச்சி ஆய்வுகளுக்கான நிறுவன மன்றத்தின் உறுப்பினராக பணியாற்றினார். [9]

வர் தற்போது இலங்கையில் கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார், அவ்வப்போது இலங்கையில் உள்ள கோவிட் நிலைமை குறித்த அறிவிப்புகள் மற்றும் அறிக்கைகளை வழங்கி வருகிறார். [10] [11] [12] இப்பெருந்தொற்று நோயின் புதிய மாறுபாடுகள் மற்றும் விகாரங்களைக் கண்டறிதல் மற்றும் பகுப்பாய்விலும் இவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். [13] [14] [15] 2021 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் தனிப்பட்ட காரணங்கள் மற்றும் பணிச்சுமை காரணமாக தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையத்தின் சுயாதீன தடுப்பூசி ஆலோசனை நிபுணர் குழுவிலிருந்து இவர் விலகினார். [16] [17] [18]

விருதுகள்

தொகு

மருத்துவப் படிப்பின் இறுதி ஆண்டான 2000 ஆம் ஆண்டில் சோசப் நல்லையா ஆறுமுகம் நினைவு விருதை நீலிகா பெற்றார். 2011 ஆம் ஆண்டு இலங்கை மருத்துவ சங்கத்தின் மதிப்புமிக்க எசு.சி பால் ஓரேசன் மற்றும் தங்கப் பதக்கம் பெற்றார். 2012 ஆம் ஆண்டு மூன்றாவது உலக அகாடமி அறிவியல் இளம் விஞ்ஞானி விருதையும் பெற்றார். 2014 ஆம் ஆண்டில் மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக சோந்தா விருதையும் பெற்றார். 2015 ஆம் ஆண்டு சிறீ செயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தில் சிறந்த ஆராய்ச்சியாளராக அவர் அங்கீகரிக்கப்பட்டார். [4] 2020 ஆம் ஆண்டில் சிறந்த 50 தொழில்முறை மற்றும் தொழிலதிபர் பெண் விருதுகளில் கோவிட் -19 பற்றிய ஆராய்ச்சி பணிக்காக உத்வேகம் தரும் பெண் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.[19]

மேற்கோள்கள்

தொகு
  1. "Prof. Malavige on second jab, concerns over AstraZeneca and more". Print Edition - The Sunday Times, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
  2. "Financial News | Sundayobserver.lk". archives.sundayobserver.lk. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
  3. "'If India can, why can't we?': Prof. Neelika Malavige on SL's capacity to produce a Covid-19 vaccine". www.themorning.lk. 30 January 2021. Archived from the original on 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
  4. 4.0 4.1 4.2 4.3 "Prof. Neelika Malavige, Department of Immunology and Molecular Medicine | University of Sri Jayewardenepura" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02."Prof. Neelika Malavige, Department of Immunology and Molecular Medicine | University of Sri Jayewardenepura" பரணிடப்பட்டது 2018-06-13 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2021-05-02.
  5. "And the Best Researcher is..." USJ - University of Sri Jayewardenepura, Sri Lanka (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-11-19. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
  6. "World Vision, Citi-Foundation support anti-body testing efforts". Sunday Observer (in ஆங்கிலம்). 2020-08-22. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
  7. "Oxford University researchers release cheap, quick COVID-19 antibody test". Daily News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
  8. "Oxford scientists release cheap, quick COVID-19 antibody test, Sri Lankan among researchers". NewsWire (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-03-30. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
  9. "Neelika Malavige Joins ISID's Executive Committee". ISID (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-05-16. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
  10. "New and more potent strain of coronavirus detected in Sri Lanka: immunologist" (in en-IN). 2021-04-24. https://www.thehindu.com/news/international/new-and-more-potent-strain-of-coronavirus-detected-in-sri-lanka-immunologist/article34400192.ece. 
  11. "Covid-19 is now airborne - Prof. Neelika Malavige". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  12. "(VIDEO) New COVID variant detected; Prof. Malavige urges to wear facemasks". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2021-04-23. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
  13. "BSL Academy to promote women and girls in science for a greener planet | Daily FT". www.ft.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  14. Nadeera, Dilshan. "Prof. Malavige pleads to keep virulent coronavirus strain from S. Africa, UK out of Sri Lanka" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
  15. "We continue to sequence virus strains in Sri Lanka: Prof Malavige". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  16. "Prof. Neelika Malavige resigns from vaccine committee - Latest News | Daily Mirror". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-07-02.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  17. "Prof. Neelika Malavige resigns from vaccine advisory committee". www.adaderana.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-02.
  18. "Two more resign from vaccine committee". Print Edition - The Sunday Times, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 2021-07-02.
  19. "Ada Derana's Indeewari Amuwatte among top inspirational women in Sri Lanka". www.adaderana.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.

புற இணைப்புகள்

தொகு
  • Neelika Malavige publications indexed by Google Scholar
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலிகா_மாளவிகே&oldid=3624602" இலிருந்து மீள்விக்கப்பட்டது