நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 (Consumer Protection Act, 2019) என்பது இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் ஆகும். இது 1986 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 சட்டத்தினை நீக்கம் செய்து அதற்கு மாற்றாக இது இயற்றப்பட்டது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 | |
---|---|
சான்று | Act No. 35 of 2019 |
நிலப்பரப்பு எல்லை | இந்தியா |
இயற்றியது | மக்களவை |
இயற்றப்பட்ட தேதி | சூலை 30, 2019 |
இயற்றியது | மாநிலங்களவை |
இயற்றப்பட்ட தேதி | ஆகத்து 6, 2019 |
சம்மதிக்கப்பட்ட தேதி | ஆகத்து 9, 2019 |
சட்ட வரலாறு | |
சட்ட முன்வரைவு | நுகர்வோர் பாதுகாப்பு மசோதா, 2019 |
அறிமுகப்படுத்தியது | இராம் விலாசு பாசுவான் |
ரத்து செய்யப்படுபவை | |
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 |
இந்தச் சட்டத்தினை நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் இராம் விலாசு பாசுவானால் மக்களவையில் சூலை 8, 2019இல்முன்மொழியப்பட்டு[1] சூலை 30, 2019 இல் நிறைவேறியது. ஆகத்து 6, 2019 இல் மாநிலங்களவையில் நிறைவேறியது.[2][3]
இந்த மசோதா ஆகத்து 9 இல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் ஒப்புதலைப் பெற்று அரசிதழில் அன்றே வெளியானது.[4] இந்தச் சட்டம் நவம்பர் 2019 முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.[5]
சான்றுகள்
தொகு- ↑ "Chapter At A Glance". PRSIndia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 August 2019.
- ↑ "Five new rights you now get as a consumer - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-08-28.
- ↑ "Rajya Sabha passes Consumer Protection Bill 2019". Zee News (in ஆங்கிலம்). 2019-08-07. பார்க்கப்பட்ட நாள் 2019-08-28.
- ↑ http://egazette.nic.in/WriteReadData/2019/210422.pdf
- ↑ "Centre to frame rules within three months to implement Consumer Protection Act: Paswan". The Hindu (in Indian English). 13 August 2019. பார்க்கப்பட்ட நாள் 14 August 2019.