நுவேவா விஸ்காயா

நுவேவா விஸ்காயா (Nueva Vizcaya) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், ககயன் பள்ளத்தாக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் பயோம்பொங் ஆகும். இது 1839 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இம்மாகாணத்தில் 275 கிராமங்களும், 15 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் கார்லோஸ் எம். படிலா (Carlos M. Padilla) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 3,975.67 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக நுவேவா விஸ்காயா மாகாணத்தின் சனத்தொகை 452,287 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 60ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 31ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு , ஆங்கிலம் உள்ளடங்கலாக ஆறு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன.

நுவேவா விஸ்காயா
மாகாணம்
மாகாணத் தலைமையகம்
மாகாணத் தலைமையகம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்ககயன் பள்ளத்தாக்கு
நேர வலயம்PHT (ஒசநே+8)
அதிகாரப்பூர்வ இணையதளம்

மேற்கோள்கள் தொகு

  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 21 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Population of the provine". Archived from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-10.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுவேவா_விஸ்காயா&oldid=3560971" இலிருந்து மீள்விக்கப்பட்டது