நூரன் சகோதரிகள்
நூரன் சகோதரிகள் (Nooran Sisters) - (ஜோதி நூரன் மற்றும் சுல்தானா நூரன்) - இவர்கள் இந்தியாவின் ஜலந்தரைச் சேர்ந்த ஒரு சூபி இசை பாடும் இரட்டையர்கள் ஆவர். இவர்கள் ஷாம் சௌராசியா கரானா பாரம்பரிய இசை மற்றும் “மிராசி” இசை மரபுகளைப் பின்பற்றுகிறார்கள். இவர்களின் தந்தை உஸ்தாத் குல்ஷன் மீர், பிரபல மறைந்த உஸ்தாத் சோஹன் லாலின் மகனாவார். இவர்களின் தந்தை இவர்களின் ஆசிரியர் மற்றும் குரு மட்டுமல்ல; அவர் தனியே இசையமைக்கிறார். இவர்களின் இசை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை அவர் செய்கிறார். சில நேரங்களில் அவர் இவர்களுடன் சேர்ந்து பாடுகிறார்.
நூரன் சகோதரிகளின் மொழியியல் மற்றும் இசை மரபுகளில் மிகவும் வேரூன்றியுள்ளனர். இவர்களின் பாட்டி பிபி நூரன் அவரது காலத்தின் நன்கு அறியப்பட்ட பாடகி, மற்றும் நூரன் சகோதரிகள் இப்போது அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறார்கள். இவர்களின் தந்தை குல்ஷன் மிர் அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது இவர்களின் முன்கூட்டியே திறமையைக் கவனித்தார். நிக்கி ஆவாஸ் பஞ்சாப் தி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அங்கீகாரம் பெற்றனர். இந்த இளம் பெண்களிடமிருந்து வெளிவந்த பாரம்பரியமான இசை நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது.
இளமைக் காலம்
தொகுசகோதரிகளுக்கு குழந்தை பருவத்திலிருந்தே இவர்களின் தந்தை உபித் குல்சன் மிர், பிபி நூரனின் பேரனும், 1970களின் சூபி பாடகரான சுவர்ன் நூரனின் மகன் போன்றோர் பயிற்சி அளித்தனர். இவரது தந்தை மிர்ரின் கருத்துப்படி, குடும்பம் கடினமான காலங்களில் இருந்தது. மிர் இவர்களுக்கு ஆதரவாக இசைப் பாடங்களில் பயிற்சி அளித்தார்.
சுல்தானா நூரனுக்கு ஏழு வயதும், ஜோதி நூரனுக்கு ஐந்து வயதும் இருந்தபோது, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மிர் இவர்களின் திறமையைக் கண்டுபிடித்தார். இவர்கள் தங்களது பாட்டி கற்றுக்கொண்ட 'குல்லி விச்சோ நி யார் லேப் லே' என்ற புல்லே ஷா கலாம் என்ற பாடலை பாட முடியுமா என்று கேட்டார். கைம்முரசு இணை மற்றும் ஆர்மோனியத்துடன் தொழில் ரீதியாக பாடினர்.
கனேடிய இசை விளம்பரதாரரான இக்பால் மகால் 2010 இல் சகோதரிகளைக் கண்டுபிடித்து இவர்களின் வெற்றியில் ஒரு பெரிய பங்கைக் கொண்டிருந்தார். 2013 ஆம் ஆண்டில் இவர்கள் முதன்முறையாக நகோடரில் உள்ள பாபா முராத் ஷா தர்காவில் நிகழ்ச்சி நடத்தினர். மேலும் அந்த இரவில் இருந்து மக்கள் மத்தியில் இவர்கள் மிகவும் பிரபலமடைந்தனர். இவர்களின் "அல்லாஹ் ஹூ" பாடல் யூடியூப் வெற்றி பெரும் பெற்றது. அதன் பிறகு "மே யார் தா தீவானா" மற்றும் "படகா குட்டி" போன்ற பாடல்கள் இருவரின் பிரபலத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகித்தன. பாலிவுட் திரைப்படங்களில் இவர்களது பல பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
தொழில்
தொகுஇந்தியாவின் பஞ்சாபில் உள்ள பாட்டியாலாவிலுள்ள ஹர்பால் திவானா நிகழ்த்துக் கலைகளின் மையத்தில் மறைந்த கசல் மேத ஜக்ஜித் சிங்கின் 72 வது பிறந்தநாள் விழாவில் இவர்கள் பங்கேற்றனர். இந்தியாவில் எம்டிவி டேலண்ட் ஹன்ட் தொடரில் எம்டிவி சவுண்ட் டிரிப்பின், "துங் துங்" பாடலுடன், பின்னர் எம்டிவி அன் பிளக் மற்றும் கோக் ஸ்டுடியோவுடன் புகழ் பெற்றனர்.
நிகழ்ச்சி
தொகுஇவர்கள் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் டாக்கா சர்வதேச நாட்டுப்புற விழாவில் தங்களது இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.
பாலிவுட்
தொகு2014 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் வெளிவந்த ஹைவே என்றத் திரைப்படத்தில் படகா குட்டி எனற பாடலுடன் திரைத்துறையில் இசை இயக்குனர் ஏ. ஆர். ரகுமானின் இசையில் அறிமுகமானார். இவர்கள் சுல்தான், மிர்சியா, தங்கல், ஜப் ஹாரி உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளனர்.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
தொகுவருடம் | வகை | பரிந்துரைக்கப்பட்ட பாடல் | இசைத் தொகுப்பு | முடிவு | Ref(s) |
---|---|---|---|---|---|
மிர்ச்சி இசை விருதுகள் | |||||
2014 | ஆண்டின் பெண் பாடகர் | "படகா குட்டி" | "ஹைவே" | வெற்றி | [3] |
ஆண்டின் வளரும் பெண் பாடகர்கள் | |||||
2015 | ஆண்டின் இண்டி பாப் பாடல் | "தெரியான் து ஜானே" | கோக் ஸ்டுடியோ | பரிந்துரை | [4] |
2017 | "காம்லி" | - | [5] | ||
'மிர்ச்சி இசை விருதுகள் பஞ்சாபி' | |||||
2015 | ஆண்டின் பெண் பாடகர் | "ஜிந்தே மரியே" | "கிஸ்ஸா பஞ்சாப்" | வெற்றி | [6] |
குறிப்புகள்
தொகு- ↑ "GIMA » Winners for 2015". பார்க்கப்பட்ட நாள் 25 September 2017.
- ↑ "And the AWARD goes to…". Indian Express (Mumbai). 30 January 2015. http://indianexpress.com/article/entertainment/screen/and-the-award-goes-to-2/. பார்த்த நாள்: 25 September 2017.
- ↑ "MMA Mirchi Music Awards". MMAMirchiMusicAwards. பார்க்கப்பட்ட நாள் 2018-03-26.
- ↑ "MMA Mirchi Music Awards". MMAMirchiMusicAwards. பார்க்கப்பட்ட நாள் 2018-03-25.
- ↑ "MMA Mirchi Music Awards". MMAMirchiMusicAwards. பார்க்கப்பட்ட நாள் 2018-03-26.
- ↑ "MMA Mirchi Music Awards". பார்க்கப்பட்ட நாள் 25 September 2017.