நூர் முகதம்

நூர் முகதம் (Noor Mukadam உருது: نور مقدم‎ 23 அக்டோபர் 1993 - 21 ஜூலை 2021) இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பிரிவு F-7/4 இல் கொலை செய்யப்பட்டவர் ஆவார் . 27 வயதான நூர், முன்னாள் பாக்கித்தான் இராஜதந்திரியான சௌகத் முகதாமின் மகள் ஆவார். [1] 21 ஜூலை 2021 அன்று இஸ்லாமாபாத் , பிரிவு F-7/4 இல் உள்ள ஒரு வீட்டில் அவள் கொலை செய்யப்பட்டார் [2] [3] கைத்துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன்பு இவர் பிராசு நக்கிளால் சித்திரவதை செய்யப்பட்டு, கொலைகாரன் ஜாகிர் சாபரால் இவரது தலை துண்டிக்கப்பட்டது. [4] [3]

27 வயதான சாகிர் சாபர் கொலை செய்தார் என்று அடையாளம் காணப்பட்டார், அவர் அந்த இடத்திலேயே கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.[5][6] சாபரின் பெற்றோர் மற்றும் வீட்டு ஊழியர்களும் உடந்தையாக இருந்ததற்காக மற்றும் ஆதாரங்களை மறைத்ததற்காக கைது செய்யப்பட்டனர். [7] காவல் துறையினரின் கூற்றுப்படி, நூர் தனது திருமண திட்டத்தை ஏற்க மறுத்ததால் இந்தக் கொலை நிகழ்ந்ததாக கூறினர். இந்த கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும் கூறியுள்ளனர்.[8]

சம்பவம்

தொகு

ஜியோ நியூஸின் கூற்றுப்படி, நியூயார்க்கிற்கு ஒரு வழி விமான பயணச் சீட்டினை சாபர் முன்பதிவு செய்துள்ளார்.[9] சாபரின் விமானப் புறப்பாடு ஜூலை 19 காலை அதிகாலை 3:50 மணி( PST) எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஜூலை 18 மதியம் பிற்பகல் 1 மணியளவில், சாபர் அடுத்த இரவு அவரை இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல ஒரு வாடகியினை ஏற்பாடு செய்தார். அவரிடம் ரூ. 2,000 அதற்காக செலவு ஆகும் என கூறப்பட்டது. புளூ ஏரியாவில் இருந்து சாபர், நூரினை அழைபேசியின் மூலம் அழைத்துள்ளார். அந்த நேரத்தில் நூர் இஸ்லாமாபாத்தின் கடற்படை ஆங்கரேஜ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இரவு 9.05 மணியளவில், நூர் தனது வீட்டை விட்டு சாபர் வீட்டிற்குச் சென்றார், இரவு 10 மணியளவில் F-7/4 செக்டாரில் உள்ள அவரது குடியிருப்பை அடைந்தார். அவர் செல்லும் வழியில், இரவு 9:45 மணியளவில் சாபருக்கு இரண்டு முறை குறுஞ்செய்தி அனுப்பினாள், அவன் இருக்கும் இடம் பற்றி அவனிடம் கேட்டுள்ளார். [10]

நூர் சாபரின் வீட்டை அடைந்த பிறகு, அவரது பயணத் தேதியை மாற்ற முடியுமா என்று விசாரிப்பதற்காக பயண முகமைக்கு நூர் தொடர்ச்சியான அழைப்புகளைச் செய்ததாக விசாரணை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. சாபர் பயணச் சீட்டினை மாற்றினால் அவருடைய விமானச் சீட்டு "வீணாகிவிடும்" என்று கூறப்பட்டது, அதற்கு அவர் "முகமைப் பணியாளாரிடம் மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக" தகவல் கொடுத்தால் அவருடைய பயணச் சீட்டு எப்படி வீணாகும் என்று கேட்டுள்ளார். [10] அவர் சாபரின் பயணச் சீட்டினை ரத்து செய்ய முயற்சிப்பதாக அறிவித்தார், ஆனால் அந்த அறிவிப்பு காலம் மிகக் குறைவாக இருந்தது, 10 நாட்களுக்குப் பிறகு அவர் பயணம் செய்தால் அது தனது முன்பதிவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சாபர் கேட்டார். சாபர் பின்னர் மேலும் ஐந்து முறை முகவரைத் தொடர்பு கொண்டார், இறுதியாக அவர் திட்டமிட்டபடிபயணம் மேற்கொள்ளப் போகிறார் என்பதை ஒரு குறுஞ்செய்தியில் உறுதிப்படுத்தினார். [10]

இரவு 11 மணியளவில், சாபர் முன்பதிவு செய்த வாடகி அவரை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல அவரது வீட்டிற்கு வந்தது. வாடகி ஓட்டுநர் இரவு 11:15 மணிக்கு சாபரை அழைத்தார்.

சான்றுகள்

தொகு
  1. "Former Pakistan Envoy's Daughter Noor Mukadam Killed In Islamabad; Probe Underway".
  2. "'Suspect booked on premeditated murder charges in killing of ex-diplomat's daughter'".
  3. 3.0 3.1 Asad, Munawer Azeem | Malik (2021-07-25). "Accused tortured Noor with knuckleduster before beheading her, court told". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
  4. Naseer, Tahir (2021-07-24). "Noor Mukadam murder: Court extends suspect's physical remand for 2 days". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
  5. Berger, Miriam (28 July 2021). "Outcry in Pakistan over beheading of former ambassador’s daughter". Washington Post. https://www.washingtonpost.com/world/2021/07/27/noor-mukadam-pakistan-murder-femicide/. பார்த்த நாள்: 29 July 2021. 
  6. "'Shot and slaughtered': Former Pakistan diplomat Shaukat Ali Mukadam’s daughter brutally murdered in Islamabad". https://www.timesnownews.com/international/article/shot-and-slaughtered-former-pakistan-diplomat-shaukat-ali-mukadams-daughter-noor-mukadam-brutally-murdered-in-islamabad/788532. 
  7. Qarar, Shakeel (2021-07-25). "Islamabad police arrest parents, household staff of suspect for 'helping, hiding evidence' of Noor's murder". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
  8. Anjum, Shakeel (26 July 2021). "Noor Mukadam’s murder: Parents of accused, two servants held for not informing police". The News. https://www.thenews.com.pk/print/868691-noor-mukadam-s-murder-parents-of-accused-two-servants-held-for-not-informing-police. பார்த்த நாள்: 29 July 2021. 
  9. "Noor Mukaddam murder - a timeline of events". Geo News. 30 July 2021. https://www.geo.tv/latest/362513-noor-mukaddam-murder-a-timeline. பார்த்த நாள்: 30 July 2021. 
  10. 10.0 10.1 10.2 . 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூர்_முகதம்&oldid=3280914" இலிருந்து மீள்விக்கப்பட்டது