நெஞ்சுக்கு நீதி (நூல்)

நெஞ்சுக்கு நீதி திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி எழுதிய சுயவரலாற்று நூல் ஆகும். ஆறு பாகங்களாக வெளியாகியுள்ளன. முதல் பாகம் தினமணிக் கதிர் இதழில் தொடராக வெளியானது. 1924 இல் கருணாநிதியின் பிறப்பு முதல் 1969 இல் அவர் தமிழ்நாட்டின் முதல்வராகும் வரையான அவரது வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறுகிறது. 1969–76 நிகழ்வுகளை விவரிக்கும் இரண்டாம் பாகம் குங்குமம் இதழில் தொடராக வெளியானது. 1976–88 காலகட்ட நிகழ்வுகள் பற்றி மூன்றாம் பாகமும், 1989–96 நிகழ்வுகளை நான்காம் பாகமும் விவரிக்கின்றன.

நெஞ்சுக்கு நீதி
முதல் பக்க அட்டை
நூலாசிரியர்மு.கருணாநிதி
நாடு இந்தியா
மொழிதமிழ் மொழி
வகைசுயசரிதை
வெளியீட்டாளர்குங்குமம்

1996–1999 வரையிலான நிகழ்வுகளை விவரிக்கும் ஐந்தாம் பாகம் (முதல் பதிப்பு) வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் ஜூன் 2, 2013 அன்று நடைபெற்றது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ச. மோகன் தலைமை தாங்கி, நூலை வெளியிட்டார். முதல் பிரதியைப் பேராசிரியர் மா. நன்னன் பெற்றுக் கொண்டார்.[1]

1999–2006 வரையிலான நிகழ்வுகளை விவரிக்கும் இந் நூலின் ஆறாம் பாகம் டிசம்பர் 14, 2013 அன்று வெளியிடப்பட்டது. உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் வெளியிட, கவிஞர் வைரமுத்து முதல் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார்[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=100688[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Kolappan, B.; Kolappan, B. (12 December 2013). "6th volume of Karunanidhi's memoirs set for release" – via www.thehindu.com.
  3. "திராவிட இயக்கத்துக்கு கேடு விளைவிக்காத கட்சியுடன் கூட்டணி:  கருணாநிதி". Dinamani. {{cite web}}: no-break space character in |title= at position 59 (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெஞ்சுக்கு_நீதி_(நூல்)&oldid=3388663" இலிருந்து மீள்விக்கப்பட்டது