நெட்டை கோபுரம்
நெட்டை கோபுரம் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், விஜயமங்கலத்தின் வடக்கில், கினிப்பாளையம் செல்லும் சாலையில் சேரன் நகரில் கி.பி.3-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திகம்பர சமணக் கோயில் ஆகும். இக்கோயில் மூலவரான ரிசபநாதர் உருவச் சிலை டிசம்பர், 2011ல் களவாடப்பட்டத்தால், மூலவர் இருந்த இடத்தில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.[1] இக்கோயிலின் மூலவர் பெயர் அமணேஸ்வரர் எனும் ரிசபநாதர் ஆவார்.
சிறப்புகள்
தொகு- இந்த கோவில் கி.பி.3-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சமணகோவிலாகும்.
- இக்கோவிலின் உண்மையான பெயர் அமணேஸ்வரர் ஆலயம் ஆகும்.
- கோவிலைச் சுற்றுலும் கல்வெட்டுக்களும் புடைப்புச் சிற்பங்களும் உள்ளன.
- சமணர் தத்துவம்,சமணர் இலக்கியங்கள் பற்றி அறிய உதவும் ஒரு பல்கலைக்கழகமாக உள்ளது.
- சமண தீர்த்தங்கரர்களில் 8-வது தீர்த்தங்கரரான சந்திரபிரபா நினைவாக இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது.
பிற செய்திகள்
தொகுஉதயணன் வரலாற்றை பெருங்கதையாக வடிக்க தமிழ்ச்சங்கம் அனுமதி அளித்தது. கொங்கு வேளிர் தனது பெருங் கதையை இதே விஜயமங்கலம் சமணக் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.