துரைசாமி நெப்போலியன்

(நெப்போலியன் (திரைப்பட நடிகர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நெப்போலியன் என அழைக்கப்படும் குமரேசன் துரைசாமி[1] (Kumaresan Duraisamy or Napoleon), (பிறப்பு: டிசம்பர் 2, 1963) தென்னிந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் பெற்றோர் பெயர் துரை சாமி ரெட்டியார் தாயார் பெயர் சரஸ்வதி அம்மாள் . இவர் 7 பிள்ளைகள் .இவர் 2009 ஆம் ஆண்டு 15 வது மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சமூகநீதி இணையமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.[2] தமிழ்த் திரையுலகிற்கு புது நெல்லு புது நாத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் மொத்தம் 70 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

குமரேசன் துரைசாமி (நெப்போலியன்)
நாடாளுமன்ற உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 திசம்பர் 1963 (1963-12-02) (அகவை 60)
திருச்சி, தமிழ்நாடு
அரசியல் கட்சிதிமுக, பாஜக
துணைவர்ஜெயசுதா
As of மே 30, 2009
மூலம்: [1]

நடித்துள்ள திரைப்படங்கள்

திரைப்படம் ஆண்டு குறிப்பு
தசாவதாரம் 2008
விருமாண்டி 2004
சுயம்வரம் 1999
தாயகம் 1996
கிழக்குச் சீமையிலே 1992
புது நெல்லு புது நாத்து 1991 அறிமுகம்
சீவலப்பேரி பாண்டி 1994

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=துரைசாமி_நெப்போலியன்&oldid=3893869" இலிருந்து மீள்விக்கப்பட்டது