நியான்ஃபோ
நியான்ஃபோ(சீனம்) அல்லது நெம்புட்ஸு(ஜப்பானியம்) என்பது மகாயான பௌத்தத்தின் சுகவதி பிரிவினரால் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். இதற்கு புத்தரின் நினைவு என பொருள் கொள்ளலாம். பக்தியின் காரணமாக அமிதாப புத்தரை வாழ்த்துவதையே இந்தச்சொல் குறிப்பிடுகிறது. இதை அவ்வபோது கூறுவதினால் அமிதாபரின் சுகவதியில் பிறக்கலாம் என சுகவதி பிரிவினரால் கருதப்படுகிறது.
நமோ அமிதாப புத்த என்ற சமஸ்கிருத சொற்றொடரே ஆரம்ப காலத்தில் நெம்புட்ஸுவாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கு அமிதாப புத்தர் போற்றி என்று பொருள். எனினும் பௌத்தம் பல நாடுகளுக்கு பரவிய வேளையில் இந்த சொற்றொடர் அந்தந்த நாட்டின் உச்சரிப்புக்கு ஏற்றவாறு மாற்றம் பெற்றுவிட்டது.
பல்வேறும் மொழிகளில்
தொகுபின் வரும் அட்டவனையில் இம்மந்திரத்தின் வெவ்வேறு ஒலிப்புகளைக் காணலாம்:
மொழி | வரி வடிவம் | ஒலிப்பு |
---|---|---|
மாண்டரீன் சீனம் | 南無阿彌陀佛 | நமோ அமிடஃபோ |
ஜப்பானியம் | கன்ஜி: 南無阿弥陀仏 ஹிரகனா: なむ あみだ ぶつ |
நமு அமிடா புட்ஸு |
கொரிய மொழி | 남무아미타불 | நம் மு அ மி டா புல் |
வியட்நாமிய மொழி | Nam Mô A Di Đà Phật | நம் மோ ஆ யீ டா பட் |
அமிதாபரின் பெயரை நினைவுக்கூர்ந்து உச்சரித்துக்கொண்டே இருந்தால் அமிதாபரின் சுகவதியில் மறுபிறப்பு கிடைக்குமென சுகவதி பௌத்தத்தினர் நம்புகின்றனர். அவர்களின் கூற்றுப்படி, இச்செயல் எண்ணிலடங்கா தீய கருமங்களை அழிக்கும் வல்லமை உடையது.
சுகவதி பௌத்தத்தின் ஜோடோ ஷின்ஷு பிரிவனரின் படி நியான்ஃபோ என்பதை வேண்டுதலாக இல்லாமல் அமிதாப புத்தரின் மேதுள்ள பக்தியில் செய்யப்படுவது எனக்கருதினர். ஏனெனில் எப்போது ஒருவருக்கு அமிதாப புத்தரின் மீது நம்பிக்கை வருகிறதோ, அப்பொழுதே அவர் சுகவதியில் மறுபிறப்பெய்துவது உறுதி செய்யப்படுகிறது.
தோற்றம்
தொகுநியான்ஃபோவின் தத்துவம் சுகவதிவியூக சூத்திரத்தில் இருந்து பெறப்படுகிறது. இந்த சூத்தரத்தின் படி, அமிதாபர் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் காப்பாற்றுவதற்காக 48 உறுதிமொழிகள் எடுத்துக்கொள்கிறார்.
அவரது 18வது உறுதிமொழியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
“ | நான் புத்த நிலை அடையும் போது, இந்த பிரபஞ்சத்தில் என் மீது நம்பிக்கை உள்ள அனைத்து உலகங்களிலும் உள்ள உயிர்களும் சுகவதிவதியில் பிறக்க வேண்டி என் மீது பற்று வைத்து 10 முறையேனும் எனது பெயரை அழைத்து, அவர்கள் சுகவதியில் பிறக்காவிட்டால், எனக்கு போதி கிடைக்காமல் போகட்டும். எனினும் பஞ்சமா பாவங்கள் செய்தவர்களும் தர்மத்தை தூற்றுபவர்கள் இதிலிருந்து விலக்கப்படுகிறார்கள் | ” |
இதன் எளிமையின் காரணமாக பொது மக்களிடம் இந்த நெம்புட்ஸு மிகவும் புகழ் பெற்று விளங்கத்தொடங்கியது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- ஜோடோ ஷு பிரிவனரின் கருத்துப்படி - நியான்ஃபோ
- டன்னிஷோ பரணிடப்பட்டது 2008-01-02 at the வந்தவழி இயந்திரம்
- சுகவதிவியூக சூத்திரம் பரணிடப்பட்டது 2011-06-14 at the வந்தவழி இயந்திரம்
- பௌத்த அகராதி[தொடர்பிழந்த இணைப்பு] (புகுபதிகைப் பெயர் "guest")