நெய்தற் கார்க்கியார்

நெய்தற் கார்க்கியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். நெய்தல் திணைப் பாடல்கள் இரண்டு இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளன. 'நெய்தல்' என்னும் அடைமொழி இவரது பெயருக்கு தரப்பட்டுள்ளதன் காரணம் இதனால் புலனாகும்.

கார் என்பது கருமைநிறம் கொண்ட மழைமேகத்தைக் குறிக்கும். காரி என்னும் பெயர் மழைமேகம் போன்று உதவுபவன் என்னும் பொருளைத் தரும். காரி என்னும் ஆண்பால் பெயருக்கு இணையான பெண்பால் பெயர் கார்க்கி. இவர் கார்க்கியார்.

இவரது பாடல் சொல்லும் செய்தி தொகு

குறுந்தொகை 55 தொகு

தலைவி வாடியிருக்கிறாள். காரணம் வாடைக்காற்று வீசும் காலம் வந்துவிட்ட பிறகும் அவளது தலைவன் அவளைத் திருமணம் செய்துகொள்ளாததுதான். தலைவியை அடையத் தலைவன் வெளிப்புறத்தில் காத்திருந்தபோது தோழி இவ்வாறு சொல்லித் திருமணம் செய்துகொள்ளத் தலைவனை வற்புறுத்துகிறாள்.

மணிப்பூ தொகு

மணிப்பூ நெய்தல் நிலத்து உப்பங்கழியில் பூக்கும். வாடைக்காற்றுப் பட்டால் இது கூம்பிவடும்.

குறுந்தொகை 212 தொகு

தலைவன் தேரில் வருகிறான். தலைவி அதனைப் பார்த்து மகிழ்கிறாள். அவன் அவளோடு விளையாடுகிறான். பின்னர் அவன் தன் தேரில் ஏறி மீள்கிறான். அப்போது அவள் நாணம் கொள்கிறாள். (நாணம் புணர்ச்சிக்குப் பின் வந்தது)

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெய்தற்_கார்க்கியார்&oldid=2718111" இலிருந்து மீள்விக்கப்பட்டது