நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட், முபச: 513683 ) இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பழுப்பு நிலக்கரிச் சுரங்க நிறுவனம். இந்தியப் பொது நிறுவனங்களில் நவரத்னா (NavaRatna) வகையினைச் சேர்ந்தது. தமிழ் நாடு, நெய்வேலியில் அமைந்துள்ள இது வருடத்துக்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு-எரிபொருள் உற்பத்தி செய்கிறது. மேலும் இதன் மின்சார உற்பத்தி நிறுவுதிறன் வருடத்திற்கு 5192.56 மெகாவாட்.
வகை | பொதுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1956 |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
முதன்மை நபர்கள் | Shri.ராகேஷ் குமார் (தலைவர் & எம்.டி.)[1] |
உற்பத்திகள் | லிக்னைட், மின்சாரம் |
வருமானம் | ▲ ₹8,672.84 கோடி (US$1.1 பில்லியன்)(2017)[2] |
நிகர வருமானம் | ▲ ₹2,368.81 கோடி (US$300 மில்லியன்)(2017) |
பணியாளர் | 12874 (30.09.2019)[3] |
இணையத்தளம் | nlcindia.com |
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும். இந்த நிறுவனம் உருவாக காரனமாக இருந்தவர் ராவ் பகதூர் மா. ஜம்புலிங்கம் முதலியார் ஆவர்.[4]
பங்கு விற்பனை
தொகுமத்திய அமைச்சரவை ஆகஸ்ட் 13ஆம் தேதி ஓர் உடன்பாட்டின் மூலம் ரூ 360 கோடி மதிப்புள்ள 3.56 சதவீத பங்குகளை விற்கும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.[5] நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) பங்குகளை தமிழக அரசின் 5 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.360 கோடிக்கு வாங்கியுள்ளன.[6]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-28. பார்க்கப்பட்ட நாள் 2021-10-09.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-12. பார்க்கப்பட்ட நாள் 2021-10-09.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-12. பார்க்கப்பட்ட நாள் 2021-10-09.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-09-19. பார்க்கப்பட்ட நாள் 2020-04-28.
- ↑ http://articles.economictimes.indiatimes.com/2013-08-13/news/41374920_1_nlc-disinvestment-5-97-crore-shares-minimum-public-holding-norm
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-07. பார்க்கப்பட்ட நாள் 2014-01-23.