நெல்லைக் கண்ணன்

தமிழக பேச்சாளர்

நெல்லைக் கண்ணன் (பிறப்பு: சனவரி 27, 1945) என்பவர் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும் ஆவார். காமராசர், கண்ணதாசன் முதலிய 1970களில் தொடங்கி தமிழ்நாட்டு சூழலில் முக்கிய தலைவர்களாக, ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர்[சான்று தேவை].

நெல்லைக் கண்ணன்

திருநெல்வேலியில் பிறந்த நெல்லைக் கண்ணனின் தந்தை ந.சு.சுப்பையா பிள்ளை, தாயார் முத்து இலக்குமி. இவருக்கு உடன்பிறந்தோர் எட்டு பேராவர்.

நெல்லைக்கண்ணனின் முதல் மகன் சுகா எனப்படும் சுரேஷ் கண்ணன் திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளருமாக உள்ளார். இரண்டாம் மகன் ஆறுமுகம் புதியதலைமுறை செய்தித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளார்.

கைது நடவடிக்கைதொகு

2019 இந்தியக் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி சார்பாக மேலப்பாளையத்தில், (திருநெல்வேலி) நடைபெற்ற மாநாட்டில் பேசிய நெல்லைக் கண்ணன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் சா ஆகியர்களின் ஜோலியை முடிக்க சொல்லி, இசுலாமியர்களை தூண்டியதாகப் பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, திருநெல்வேலி காவல்துறையினர் 1 சனவரி 2020 அன்று இரவில் நெல்லைக் கண்ணனை பெரம்பலூரில் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம், நெல்லை கண்ணனை சனவரி 13 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.[1][2]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்லைக்_கண்ணன்&oldid=3040820" இருந்து மீள்விக்கப்பட்டது