நேபாள திபெத்தியப் போர்

நேபாள திபெத்தியப் போர் (Nepalese–Tibetan War) (நேபாளி: नेपाल-भोट युध्द) நேபாள இராச்சியப் படைகளுக்கும், சீனாவின் சிங் பேரரசின் கீழ் இருந்த திபெத்தியப் படைகளுக்கும் இடையே 1855 - 1856ல் திபெத்தில் நடைபெற்றது. போரில் திபெத்தியப் படைகளை தோற்கடித்து நேபாளப் படைகள் வென்றது.[1]

நேபாள திபெத்தியப் போர்
நாள் ஏப்ரல் 1855 - மார்ச் 1856
இடம் திபெத்
நேபாளத்திற்கு வெற்றி
  • தப்தலி உடன்படிக்கை
பிரிவினர்
சிங் அரசமரபு நேபாள இராச்சியம்
தளபதிகள், தலைவர்கள்
சேத்தியா கஜி ஜங் பகதூர் ராணா
பம் பகதூர் குன்வர்
தீர் சம்செர் குன்வர்
கிருஷ்ண தேஜ் குன்வர்
பிரிதிவி தேஜ் குன்வர்
பலம்
98,000 34,906
இழப்புகள்
தகவல் இல்லை தகவல் இல்லை

பின்னனி தொகு

1972ல் நடைபெற்ற சீன நேபாள போருக்குப் பின் திபெத்தியர்களுடன் நல்லுறவு காத்த நிலையில், 1850ல் சிங் பேரரசில் தைப்பிங் கிளர்ச்சி மூண்டது.[2] இந்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நேபாள பிரதம அமைச்சரும், தலைமைப் படைத்தலைவருமான ஜங் பகதூர் ராணா, சீனாவின் தலையீடு இன்றி திபெத்தை கைப்பற்ற முடிவு செய்தார்.

போர் தொகு

ஏப்ரல் 1855ல் நேபாளப் படைத்தலைவர்கள் பொம் பகதூர் குன்வர், தீர் சம்செர் பகதூர் குன்வர், கிருஷ்ண தேஜ் குன்வர், பிரிதிவி தேஜ் குன்வர் ஆகியோர் தலைமையில், நேபாள - திபெத்திய எல்லைப் பகுதிகளான கெரூங், கூட்டி, ஹும்லா, ஓலங்சுங்கோலாவில் மொத்தம் 34,906 நேபாள போர் வீரர்கள், 36 துப்பாக்கிப்படை வீரர்கள் மற்றும் எட்டு பீரங்கிகளுடன், திபெத்தை ஆக்கிரமிக்க ஆயத்த நிலையில் இருந்தனர்.

திபெத்திய படைத்தலைவர் சேத்தியா கஜி தலைமையில் 98,000 படைவீரர்கள், நேபாளப் படைகளை எதிர் கொள்ள ஆயத்தமாக இருந்தனர். போரில் நேபாளப் படைகள், திபெத்தின் கூட்டி, கெராங், டிஜாங்கா போன்ற பகுதிகளை நேபாளப் படைகள் கைப்பற்றியது.

போரின் முடிவில் தொகு

தப்தலி உடன்படிக்கையின் படி, போரில் தோற்ற திபெத்தியப் பேரரசு, ஆண்டுதோறும் பத்தாயிரம் ரூபாய், நேபாள இராச்சியத்திற்கு போர் ஈட்டுத் தொகை செலுத்த ஒப்புக்கொண்டது. [3]மேலும் திபெத்திய தலைநகரமான லாசாவில், நேபாள வணிக மையம் அமைத்துக் கொள்ளவும், திபெத்திய அரசவையில் ஒரு நேபாள முகமையாளரை அமர்த்திக் கொள்ளவும் திபெத் ஒப்புக்கொண்டது.

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு