முதன்மை பட்டியைத் திறக்கவும்

காந்தி குல்லாய்

இந்திய விடுதலைப் போராட்டம், காந்தியம்
(நேரு குல்லாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காந்தி குல்லாய் அணிந்து காணப்படும் ஜவஹர்லால் நேரு
காந்தி குல்லாய் அணிந்து காணப்படும் மகாத்மா காந்தி

காந்தி குல்லாய் அல்லது காந்தி தொப்பி கதர் (காதி) துணியால் செய்யப்பட்ட முன்புறமும் பின்புறமும் குறுகி நடுவில் விரிந்திருக்கும் குல்லாய் ஆகும். இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தி 1921ஆம் ஆண்டுவரை இதை அணிந்து பிரபலப்படுத்தியதால்[1] இது காந்தி குல்லாய் என அறியப்பட்டது; காந்தியக் கொள்கையை பின்பற்றுவதை அறிவிக்கவும் தேசிய உணர்வை வெளிப்படுத்தவும் இது அடையாளமாக விளங்கியது[2] ஜவஹர்லால் நேருவே இதை உண்மையில் பிரபலப்படுத்தியவர். இன்றும் இது காந்தியவாதிகளாலும் இந்தியாவின் அரசியல்வாதிகளாலும் குறிப்பாக காங்கிரசு கட்சியினரால் அணியப்படுகிறது. இது மட்டுமின்றி மும்பை டப்பாவாலாக்களின் தொழில்முறை அடையாளமாகவும் இது உள்ளது. குசராத் மற்றும் மராட்டிகளின் உடையின் ஓர் அங்கமாக விளங்குகிறது.

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தி_குல்லாய்&oldid=2227671" இருந்து மீள்விக்கப்பட்டது