நைரோபி
நைரோபி (Nairobi) கென்யாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஆப்பிரிக்காவில் 4ம் பெரிய நகரம் ஆகும். இந்நகரம் நைரோபி தேசியப் பூங்காவைக் கொண்டிருப்பதற்காக புகழ்பெற்றுள்ளது, உலகில் ஒரு பெரிய நகரத்தில் காணப்படுகிம் தேசியப்பூங்கா இது ஒன்றே ஆகும். இந்நகரமும் அதன் சுற்றுப்புறமும் நைரோபி மாவட்டத்தில் அமைந்திருக்கின்றன, இதன் தற்போதைய ஆளுநர் எவன்ஸ் கிடர்ரோ மற்றும் துணை ஆளுநர் ஜொனாதன் முக்கே ஆவார்.
நைரோபி Nairobi | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): "சூரியனில் பசுமை நகரம்" | |
கென்யாவிலும் ஆப்பிரிக்காவிலும் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 1°17′S 36°49′E / 1.283°S 36.817°E | |
நாடு | கென்யா |
மாவட்டம் | நைரோபி மாவட்டம் |
அமைப்பு | 1899 |
அரசு | |
• நிர்வாகம் | நைரோபி நகர மாவட்டம் |
• நிருவாகம் | மாவட்ட சட்டமன்றம் |
பரப்பளவு | |
• நகரம் | 696 km2 (269 sq mi) |
ஏற்றம் | 1,661 m (5,450 ft) |
மக்கள்தொகை (2017)[1] | |
• நகரம் | 40,00,000 |
• அடர்த்தி | 4,850/km2 (12,600/sq mi) |
• பெருநகர் | 65,47,547 |
இனம் | Nairobian |
நேர வலயம் | ஒசநே+3 (கிஆநே/UTC+3) |
இடக் குறியீடு | 020 |
இணையதளம் | nairobi |
"நைரோபி" என்ற பெயர் மசாய் சொற்றொடரான நைரோபி என்பதிலிருந்து வந்தது, இது "குளிர் நீர்" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த சொல் நைரோபி ஆற்றைக் குறிக்கும் மாசாய் பெயராகும், இதன் பெயரே நகரத்தைக் குறிக்கும் பெயராகவும் மாறியது. இருப்பினும், இது சூரியனின் பசுமை நகரம் என பிரபலமாக அறியப்படுகிறது, மேலும் பல விரிவாக்கப்பட்ட குடில்கள் புறநகர்ப்பகுதிகளில் சூழப்பட்டுள்ளது.[2]
நைரோபி 1899 ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கு ஆப்பிரிக்காவின் காலனித்துவ அதிகாரிகளால் நிறுவப்பட்டது, இது உகாண்டா ரயில்வேயின் ஒரு தோடர்வண்டி நிலையமாகவும் இருந்தது.[3] 1907 ம் ஆண்டு கெனியாவின் தலைநகராக மச்சாகோவுக்கு பதிலாக இந்த நகரம் வேகமாக வளர்ந்தது. 1963 இல் சுதந்திரத்திற்குப் பின்னர், நைரோபி கென்யா குடியரசின் தலைநகரமாக ஆனது.[4] கென்யாவில் காலனித்துவ ஆட்சிக் காலத்தின்போது, இந்த நகரம் காபி, தேயிலை, கதலை ஆகியவற்றின் தொழில் மையமாக ஆனது.[5] நாட்டின் தெற்கு பகுதியில் அத்தி ஆற்றை ஒட்டி நகரம் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1,795 மீட்டர் (5,889 அடி) உயரத்தில் உள்ளது.[6]
2011 ஆம் ஆண்டில் 3.36 மில்லியன் மக்கட்தொகை கொண்ட, நைரோபி நகரம், தன்சானியாவின், தாருஸ்ஸலாத்துக்கு அடுத்து ஆபிரிக்க கிரேட் லேக்ஸ் பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது.[1][7] 2009 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நைரோபி நிர்வாகப் பகுதியில், 696 km2 (269 sq mi) க்குள் வாழ்ந்தனர்.[8] நைரோபி ஆபிரிக்காவின் 14 வது மிகப்பெரிய நகரமாகும், (அதன் புறநகர்ப் பகுதிகள் உட்பட).
நைரோபியில், ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் உட்பட ஆயிரக்கணக்கான முக்கிய சர்வதேச அமைப்புகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட முக்கிய சர்வதேச நிறுவனங்கள் மற்றும் , பல வணிக நிறவனங்களின் அலுவலகங்களின் மையமாக உள்ளது. நைரோபி பங்குசந்தை (என்எஸ்இ) ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய ஒன்றாகும், மேலும் கண்டத்தின் இரண்டாவது மிகப் பழமையான பங்குசந்தையாகும் இது. இது வர்த்தக எண்ணிக்கையின் அடிப்படையில் ஆப்பிரிக்காவின் நான்காவது மிகப்பெரிய பங்குசந்தையாகும் ஆகும், இங்கு ஒரு நாளைக்கு 10 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தகம் நடைபெறுகிறது.[9]
வரலாறு
தொகுநைரோபியின் வரலாறு, 1899ம் ஆண்டிலிருந்து தொங்குகி்ன்றது. அப்போதைய பிரித்தானிய அரசு, மாம்போசாவிலிருந்து உகாண்டாவிற்கு தொடருந்துப் பாதை அமைக்கும் பொழுது[3] இங்கு ஒரு நிலையத்தை நிறுவியது. பத்தே ஆண்டுகளில், ஒரு நாட்டின் தலைநகர் ஆவதற்கான முழுத்தகுதியும் பெற்றது. 1907ம் ஆண்டு பிரித்தானிய கிழக்கு ஆப்பிரிக்காவின் தலைநகரானது. பின்னர் 1963ல் கென்ய குடியரசின் தலைநகரானது[10]. கென்யாவின் காலனித்துவ காலத்தில், கோப்பி மற்றும் தேயிலை வர்த்தகங்களின் மையமாகக் கருதப்பட்டது[11]. நைரோபி - ஒரு மாநகர் மட்டுமல்லாது, மாகாணமும் கூட. மாநகரானது, நைரோபி ஆற்றங்கரையில், கடல் மட்டத்திலிருந்து 1795மீ உயரத்தில் அமைந்துள்ளது[6]
நிர்வாகப் பிரிவுகள்
தொகுநைரோபி மாநகரானது, முழுக்க மாகாண ஆட்சியின் கீழ் உள்ளது. நைரோபி மாகாணமானது, மற்ற கென்ய பகுதிகளில் இருந்து வேறுபடுகிறது. இங்கு ஒரே ஒரு நகர சபை தான் உள்ளது, நைரோபி நகர சபை. 2007க்கு முன்பு வரை, நைரோபி மாகாணத்தில் மாவட்டங்களே பிரிக்கப்படவில்லை. அதன் பிறகே, மூன்று மாவட்டங்களில் பிரிக்கப்பட்டது. 2010ல், புதிய சட்டமன்ற தொகுதியோடு இணைந்து, நைரோபி ஒரு மாகாணமானது. தற்போது, நைரோபி மாவட்டம் பதினேழு தொகுதிகளைக் கொண்டுள்ளது.
சட்டமன்ற தொகுதிகள்
தொகுகென்யாவின் சட்டமன்ற தொகுதிகளும், நகர்மன்ற தொகுதிகளும்[12] பெரும்பாலும் குடியிருப்புப் பகுதிகளின் பெயர்களைக் கொண்டிருக்கும்.
சட்டமன்ற தொகுதி | நகர்மன்ற தொகுதி |
---|---|
வெஸ்ட் லேண்டு | கிட்டிசுரு · ஹைரிட்ஐ் · கருரா · கங்கேமி · மவுண்டைன் வியு |
தகோரெட்டி வ்டக்கு | கிளிமணி · கவங்வாரே · காத்தினா · கீலேசுவா · கபிரோ |
தகோரெட்டி தெற்கு | முத்து-இன் · நகாங்டோ · ரிருதா · உத்திரு · வைதகா |
லங்காத்தா | காரென் · நைரோபி மேற்கு · முகுமோ-இன் · சவுத் சி · நியாயோ ஹைரைஸ் |
கிபேரா | லைனி சபா · லிண்டி · மகினா · வுட்லே · சாரங் வாம்பே |
ராய்சம்பு | கிதுரை · கேஹாவா மேற்கு · ஜிம்மர்மேன் · ராய்சம்பு · கஹாவா |
கசராணி | கிளே சிட்டி · மிவ்க்கி · கசராணி · நிஜீரு · ருவாய் |
ருவாரகா | பாபாடோகோ · உத்தாலி · மதரே வடக்கு · லக்கி சம்மர் · கோரோகோசோ |
எம்பகாசி தெற்கு | இமாரா தைமா · குவா நஞென்கா · குவா ரூபன் · பைப்லைன் · குவாரே |
எம்பகாசி வடக்கு | காரயோபங்கி வடக்கு · தந்தோரா ஏரியா I · தந்தோரா ஏரியா II · தந்தோரா ஏரியா III · தந்தோரா ஏரியா IV · |
எம்பகாசி மத்தி | காயோலி வடக்கு · காயோலி மத்திய வடக்கு · காயோலி தெற்கு · கோமராக் · மதோபென்னி/ வசந்த பள்ளத்தாக்கு |
எம்பகாசி கிழக்கு | அப்பர் சாவன்னா · லோவர் சாவன்னா · எம்பகாசி · உத்தவாலா · மிகாங்க் |
எம்பகாசி மேற்கு | உமோஜா I · உமோஜா II · மவுலெம் · கரியோபங்கி தெற்கு · |
மகதாரா | மாரிங்கோ/ அம்சா · விவாந்தனி · அரம்பீ · மகோன்கனி |
கமோகுறிஞ்சி | புன்வாணி · ஈஸ்ட்லைய் வடக்கு · ஈஸ்ட்லைய் தெற்கு · ஏர்பேஸ் · கலிபோர்னியா |
சிதாரெகி | நைரோபி மத்தி · நிகரா · பங்கனி · ஜிவாணி/ கரியோகர் · லந்திமாவே · நைரோபி தெற்கு |
மதரே | ஹாஸ்பிட்டல் · மபாத்தினி · உருமா · நிகெய் · மிளாங்கோ குப்வா · கியாமைக்கோ |
புவி அமைப்பு
தொகுகம்பலா மற்றும் மாம்போசாவிற்கும் இடையில் நைரோபி அமைந்துள்ளது. கென்ய பிளவு பள்ளத்தாக்கு கிழக்கு விளிம்பின் அருகில் உள்ளதால், நைரோபியில் சிறு பூகம்பங்கள் மற்றும் நடுக்கம் எப்போதாவது ஏற்படும். நிகாங் மலை நகரின் மேற்கிலும், கென்ய குன்றானது வடக்கிலும், கிளிமஞ்சாரோ குன்று தென் கிழக்கிலும் அரணாக அமைந்துள்ளது. கென்ய மற்றும் கிளிமஞ்சாரோ குன்றுகளும் நைரோபியிலிருந்து நன்கு தெரியும்[13].
நைரோபி நதி மற்றும் அதன் கிளை நதிகளும், நைரோபி மாவட்டத்தின் வழியாக பயணிக்கின்றது. அமைத்க்கான உயரிய நோபல் பரிசு வாங்கிய திரு.வாங்கரி மாதை என்பவர், நகரின் உட்கட்டமைப்பு வசதிக்காவும், குடியிருப்பு அமைப்பதற்காகவும் நைரோபியின் வடக்கிலுள்ள கருரா காட்டை அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது[14].
காலநிலை
தொகுகோப்பன் வகைப்பாட்டின்படி, நைரோபி ஒரு மிதவெப்ப மண்டல காலநிலையைக் கொண்டுள்ளது[15]. கடல் மட்டத்திலருந்து 1,795 மீட்டர்கள் (5,889 அடி)ல் இருப்பதால் ஆனி மாதத்தின் மாலை வேளைகள் சற்று குளிராக இருக்கும். சில நேரங்களில், வெப்பநிலை 10 °C (50 °F) வரை இருக்கும். மார்கழி முதல் பங்ககுனி வரையிலான மாதங்கள் கோடை காலமாகும். இக்காலங்களில், சூரியனின் வெப்பநிலை அதிகமாக காணப்படும். அதிக பட்சமாக வெப்பநிலையின் அளவு, 24 °C (75 °F) வரை செல்லும்[16].
இங்கு இரண்டு மழைக்காலங்கள் உண்டு, ஆனால் மிதமான மழையே இருக்கும். ஆவணி மாதம் வரை குளிராகவும் பின்னர், குற்றாலச் சாரலோடு கருமேகங்கள் சூழ்ந்து, முதல் மழைக்காலம் தொடங்குகின்றது. நைரோபாவானது, பூமத்திய கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளதால், பருவங்களின் இடையேயுள்ள வேறுபாடுகள் குறைவாகவே உள்ளன. இங்கு ஏற்படும் பருவமாற்றங்கள், ஈரமான பருவம் மற்றும் உலர்வான பருவம் என குறிப்பிடப்படுகிறது. சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் நேரம் அதே காரணத்திற்காக ஆண்டு முழுவதும் மாறுபடுகிறது[17].
தட்பவெப்ப நிலைத் தகவல், நைரோபி | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 25.5 (77.9) |
26.7 (80.1) |
26.8 (80.2) |
25 (77) |
23.6 (74.5) |
22.5 (72.5) |
22 (72) |
22.7 (72.9) |
25 (77) |
25.7 (78.3) |
24 (75) |
24.4 (75.9) |
24.49 (76.09) |
தினசரி சராசரி °C (°F) | 18 (64) |
18.8 (65.8) |
19.4 (66.9) |
19.2 (66.6) |
17.8 (64) |
16.3 (61.3) |
15.6 (60.1) |
15.9 (60.6) |
17.3 (63.1) |
18.5 (65.3) |
18.4 (65.1) |
18.1 (64.6) |
17.8 (64) |
தாழ் சராசரி °C (°F) | 10.5 (50.9) |
10.9 (51.6) |
12.1 (53.8) |
13.4 (56.1) |
12.1 (53.8) |
10 (50) |
9.2 (48.6) |
9.1 (48.4) |
9.7 (49.5) |
11.3 (52.3) |
12.7 (54.9) |
11.7 (53.1) |
11.06 (51.91) |
மழைப்பொழிவுmm (inches) | 58.3 (2.295) |
49.8 (1.961) |
92.2 (3.63) |
242.3 (9.539) |
189.5 (7.461) |
38.6 (1.52) |
17.6 (0.693) |
24 (0.94) |
31.2 (1.228) |
60.8 (2.394) |
149.6 (5.89) |
107.6 (4.236) |
1,061.5 (41.791) |
சராசரி மழை நாட்கள் (≥ 1 mm) | 4 | 4 | 8 | 16 | 13 | 5 | 3 | 4 | 4 | 7 | 14 | 9 | 91 |
சூரியஒளி நேரம் | 288.3 | 268.4 | 266.6 | 204 | 189.1 | 159 | 130.2 | 127.1 | 180 | 226.3 | 198 | 257.3 | 2,494.3 |
Source #1: Hong Kong Observatory (1961-1990)[18] and World Meteorological Organisation[19] | |||||||||||||
Source #2: BBC Weather[20] |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Population Distribution by Political Units". knbs.or.ke. பார்க்கப்பட்ட நாள் 30 March 2015.
- ↑ Pulse Africa. "Not to be Missed: Nairobi 'Green City in the Sun'". pulseafrica.com. Archived from the original on 28 ஏப்ரல் 2007. பார்க்கப்பட்ட நாள் 14 June 2007.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 3.0 3.1 Roger S. Greenway, Timothy M. Monsma, Cities: missions' new frontier, (Baker Book House: 1989), p.163.
- ↑ City-Data.com. "Nairobi History". www.city-data.com/. பார்க்கப்பட்ட நாள் 25 August 2008.
- ↑ "History – Nairobi". City-data.com. பார்க்கப்பட்ட நாள் 18 October 2010.
- ↑ 6.0 6.1 AlNinga. "Attractions of Nairobi". alninga.com. Archived from the original on 24 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 14 June 2007.
- ↑ "Major urban areas – population". cia.gov. Archived from the original on 4 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 18 November 2014.
- ↑ "Population distribution by province/district and sex: 1979-199 censuses". Kenya Central Bureau of Statistics. Archived from the original on 14 March 2009. பார்க்கப்பட்ட நாள் 20 March 2009.
- ↑ [1] பரணிடப்பட்டது 3 திசம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம்
- ↑ City-Data.com. "Nairobi History". http://www.city-data.com/. பார்க்கப்பட்ட நாள் 2008-08-25.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ "History – Nairobi". City-data.com. பார்க்கப்பட்ட நாள் 2010-10-18.
- ↑ [2]
- ↑ Perceptive Travel. "Nairobi by Degrees". perceptivetravel.com. பார்க்கப்பட்ட நாள் 2007-06-14. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ The East African (2 November 1998). "Karura: Are We Missing the Trees for the Forest?". nationmedia.com. Archived from the original on 27 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-06-14.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "Climate: Nairobi - Climate graph, Temperature graph, Climate table". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 7 September 2013.
- ↑ United Nations. "Travel and Visa Information". unhabitat.org. Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-06-20.
- ↑ Gaisma. "Nairobi, Kenya – Sunrise, sunset, dawn and dusk times, table". gaisma.com. பார்க்கப்பட்ட நாள் 2007-06-22.
- ↑ "Climatological Normals of Nairobi". Hong Kong Observatory. Archived from the original on 2013-11-26. பார்க்கப்பட்ட நாள் 2013-09-07.
- ↑ "World Weather Information Service – Nairobi". World Meteorological Organisation (UN). June 2011. பார்க்கப்பட்ட நாள் 2010-05-09.
- ↑ "Average Conditions Nairobi, Kenya". BBC Weather. பார்க்கப்பட்ட நாள் 18 August 2009.