நொதியேறாப் பழச்சாறு

நொதியேறாப் பழச்சாறு (Must) புதியதாக பறிக்கப்பட்ட திராட்சைகளிலிருந்து பெறப்படுவதாகும். அப்போதுதான் நசுக்கப்பட்டு பழச்சாறு (பொதுவாக திராட்சைச் சாறு) எடுக்கப்பட்ட இதில் தோலிகளும் விதைகளும் (கொட்டைகள்) தண்டுகளும் கூட இருக்கும். நொதியேறாச் சாற்றின் மொத்த எடையில் 7–23% வரை இவ்வாறான திடப்பொருட்கள் இருக்கும். திராட்சைக் கள் தயாரிப்பில் இதுவே முதல் செயல்பாடு ஆகும். இதில் குளுக்கோசு இருப்பு வழமையாக 10 முதல் 15% வரை இருக்குமாதலால் பல சமையல் முறைகளில் இது இனிப்பானாகவும் பயன்படுத்தப்படுகின்றது. நமக்குக் வணிகமுறையில் பிழிந்தெடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் திராட்சை சாறு வடிகட்டப்பட்டு பாச்சர்முறையில் பதப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் கள் தயாரிப்பிற்கான மூலப்பொருளான இது திடப்பொருட்களுடன் அடர்த்தியாக இருக்கும்.

திராட்சைகளை நசுக்கி திராட்சைச் சாறு எடுக்கப்படுகின்றது. இது நொதிக்கப்படாத வரை நொதியேறா பழச்சாறு எனப்படுகின்றது.

உசாத்துணை தொகு

  • Baldy, Marian W. The University Wine Course: A Wine Appreciation Text & Self Tutorial, 2nd Edition. San Francisco: The Wine Appreciation Guild, 1995. ISBN 0-932664-69-5.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நொதியேறாப்_பழச்சாறு&oldid=3268468" இலிருந்து மீள்விக்கப்பட்டது